Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்க.. அசத்தல் நடவடிக்கை.. ஹைகோர்ட்டில் தமிழ்நாடு அரசு முக்கிய பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மனநலம் பாதித்தவர்களுக்காக 55 மறுவாழ்வு மையங்கள் அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

குடும்பத்தினரால் கைவிடப்பட்டு சாலையில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பராமரிப்பதற்காக சிறப்பு மையங்கள் அமைக்கக் கோரி சென்னையை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார்.

 55 rehabilitation centers for mentally challenged people, says Tamilnadu Govt in Madras High court

இந்த கோரிக்கை தொடர்பாக 2021-ம் ஆண்டு செப்டம்பரில் அரசுக்கு மனு அனுப்பியும் இதுவரை எந்த பதிலும் இல்லை என்றும் எனவே அந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கானது, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் திரிபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணை கூட அரசு அறிவிக்கவில்லை" என குற்றம்சாட்டினார்.

 55 rehabilitation centers for mentally challenged people, says Tamilnadu Govt in Madras High court

அரசு தரப்பில் ஆஜரான அரசு ப்ளீடர் முத்துக்குமார், தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொண்டு நிறுவனங்கள் மூலம் மனநலம் பாதித்தவர்களுக்காக 55 மறுவாழ்வு மையங்கள் அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வருவதாக கூறினார். குணமடைந்தவர்களுக்காக கன்னியாகுமரி, வேலூர், ராமநாதபுரம், திருச்சி மற்றும் மதுரையில் ஐந்து இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிவிப்பது குறித்து விளக்கமளிக்க அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர் .

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+