தமிழகத்திற்குள் வரும் 57 ஐஏஎஸ் அதிகாரிகள்! 39 தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை நியமித்த தேர்தல் ஆணையம்
சென்னை: தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 39 தொகுதிகளில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு 57 ஐஏஎஸ் அதிகாரிகளை பார்வையாளர்களாக நியமித்துள்ளது தேர்தல் ஆணையம்.
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. முதற்கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதியும், 2ஆம் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதியும், 3 ஆம் கட்ட தேர்தல் மே 7ஆம் தேதியும், 4 ஆம் கட்ட தேர்தல் 13 ஆம் தேதியும், 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 20ஆம் தேதியும் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 25ஆம் தேதியும் நடந்து முடிந்துள்ளது.

7 ஆம் கட்ட மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு வரும் ஜூன் 1 ஆம் தேதி 57 லோக்சபா தொகுதிகளில் நடைபெறுகிறது. இன்றுடன் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை நிறைவடைய உள்ளது. 7 கட்டங்களாக நடைபெறும் லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு முடிந்து, பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு காவல்துறை பாதுகாப்புடன் சிசிடிவி கண்காணிப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
வரும் ஜூன் 4ஆம் தேதி காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகளும் அதன் பிறகு மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிக்காக பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கு நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு 57 ஐஏஎஸ் அதிகாரிகளை பார்வையாளர்களாக நியமித்துள்ளது தேர்தல் ஆணையம். தென் சென்னை, வடசென்னை, மத்திய சென்னை உள்ளிட்ட 16 தொகுதிகளுக்கு தலா 2 பார்வையாளர்களும், கன்னியாகுமரி தொகுதிக்கு மட்டும் 3 பேர் பார்வையாளர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 39 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தமாக 57 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே வெளி மாநில கேடர்களைச் சேர்ந்த அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு மட்டுமல்லாது அனைத்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு கூடுதல் தேர்தல் பார்வையாளர்கள் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications