நில எடுப்பிலிருந்து 743 ஏக்கர் ரிலீஸ் ஆகிறதா? 5700 ஏக்கருக்கும் வரும் விடிவுகாலம்.. அரசு குட் நியூஸ்
சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் திட்டம் செயல்படுத்தப்படாத இனங்களில் பெறப்பட்ட புகார் பெட்டி மனுக்கள் 3920 உட்பட சுமார் 5700 ஏக்கர் நிலங்களிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இரண்டு ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைக் கொண்ட குழு அமைத்து, அரசாணணை (நிலை) எண்.10, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் (நி.எ.2.2) துறை, நாள் 23.01.2025 இன் மூலம் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வீட்டுவசதி வாரியத்தால் நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நிலத்தை வாங்கியவர்களுக்கு, விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி சென்னை, தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி தந்தார். அப்போது அவர் கூறியதாவது:

"வீட்டு வசதி வாரியத்தால் நீண்ட நாட்களுக்கு முன்பு சுமார் 40, 45 ஆண்டு காலத்திற்கு முன்பு கையகப்படுத்தப்பட்ட முயற்சி எடுக்கப்பட்டு அது முழுமையாக நிறைவேற்றப்படாத சூழ்நிலையில் அந்த நிலங்கள் வாரியமும் பயன்படுத்த முடியவில்லை, அதனுடைய உரிமையாளரும் அதன்மீது முழுமையான உரிமையை எடுக்க முடியவில்லை என்ற நிலை இருந்தது.
அரசாணை - 743 ஏக்கர்
இப்போது அந்த நிலங்கள் ஐந்து வகையாக பிரிக்கப்பட்டது. அதன்படி அரசாணை வெளியிட்டு, ஏறத்தாழ 4,396.44 ஏக்கர் ரிலீஸ் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் பெரும்பகுதி அவர்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டது. இன்னொரு 743 ஏக்கர் இருக்கிறது. அதில் பல உடனே கொடுத்து விடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. சிலவற்றில், நீதிமன்ற வழக்கு போன்ற பிரச்சினைகள் இருக்கிறது.
எனவே, அதையும் பகுப்பாய்வு செய்து விட்டு, அதற்கு பிறகுதான் அதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், ஏறத்தாழ 90% பிரச்சனைகள் 40 ஆண்டு காலமாக சிரமப்பட்டு வந்த அந்த மக்களுக்கு தீர்க்கப்பட்டிருக்கிறது.
3 மற்றும் 4வது வகையை பொறுத்தவரை, அதற்காக இரண்டு ஓய்வு பெற்ற அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்கள் அதை இப்பொழுது ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் பரிந்துரையின்படி அந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
புகார் பெட்டி மனுக்கள்
டிசம்பர், ஜனவரிக்குள் மீதமுள்ள அந்த நிலத்தையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்துவிட முடியும். அதே நேரத்தில் வீட்டுவசதி வாரியத்திற்கோ, அரசாங்கத்திற்கோ இதில் எந்தவிதமான நஷ்டமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக வாரியம் என்ன செலவு செய்திருக்கிறதோ, அந்த தொகை மற்றும் அதற்கான வட்டியினை இது அரசாங்கத்திற்கோ, வாரியத்திற்கோ திருப்பி கிடைக்க வேண்டும். அது மிக நியாயமானதாக அவர்கள் தாங்கக்கூடிய சக்தி படைத்ததாக அது இருக்கும்.
எங்களிடத்தில் முதலில் மனு கொடுத்தபோது கூட மனுக்களை நாங்கள் வாங்கி அதன் மீது ஆய்வு செய்யுங்கள் என்று சொல்வதற்கு பதிலாக, 16 இடங்களில் புகார் பெட்டி வைத்து அதில் மனுக்கள் போடுங்கள் என்று தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மனுக்கள் போட்டார்கள். புகார் பெட்டியில் வரப்பெற்றுள்ள மனுக்களின் அடிப்படையில் அதை ஒரு ஆதாரமாக வைத்துதான் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சிறு தவறும் ஏற்படக்கூடாது
எங்களை பொறுத்தவரை இதில் ஒரு சிறு தவறும் கூட ஏற்படக்கூடாது. யாருடைய பரிந்துரையின்பேரிலும் இது நடைபெற கூடாது. இதில் ஒரு கோடு போட்டது போல்தான் அந்த கமிட்டியும் அறிக்கையை கொடுக்க இருக்கிறார்கள். வாரியமும் அப்படித்தான் நடவடிக்கை எடுத்திருக்கிறது. எனவே, அந்த கோட்டிற்கு இந்த பக்கம் இருப்பவர்களை யாராவது அதிகாரியையோ, அமைச்சரையோ பார்த்து இந்த பக்கம் கொண்டுவரவோ அல்லது அந்த பக்கம் கொண்டு போகவோ முடியாது.
அப்படிப்பட்ட ஒரு நிலையைத்தான் நாங்கள் இதில் உருவாக்கியிருக்கிறோம். எந்த தவறும் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் இதிலிருந்து வெளியேற வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம்" என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications