எப்படி இருக்கு.. எல்லாம் ஓகேவா?... திடீரென விசிட் அடித்த முதல்வர் ஸ்டாலின்.. திகைத்த மக்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கொரோனா வேக்சின் முகாம்களில் முதல்வர் ஸ்டாலின் இன்று திடீரென விசிட் அடித்தார்.

தமிழ்நாட்டில் இன்று 5வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 4 தடுப்பூசி முகாம்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று 5வது வாரமாக தடுப்பூசி செலுத்துவதற்காக 30 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல் வேக்சின் மெகா முகாமில் 29 லட்சம் பேர் வரை தமிழ்நாட்டில் வேக்சின் போட்டுக்கொண்டனர். அதன்பின் இரண்டாவது முகாமில் 16 லட்சம் பேர் வரை வேக்சின் போட்டுக்கொண்டனர்..

வேக்சின்

வேக்சின்

பின்னர் மூன்றாவது முகாமில் 26 லட்சம் பேர் வரை வேக்சின் போட்டுக்கொண்டனர். அதன் பின்னர் நான்காவது முகாமில் 17 லட்சம் பேர் வரை வேக்சின் போட்டுக்கொண்டனர். இந்த நிலையில் இன்று ஐந்தாவது முகாம் நடத்தப்படுகிறது. இன்று இதுவரை தமிழ்நாட்டில் காலை 7 மணியில் இருந்து 13 லட்சம் டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது.

முகாம்

முகாம்

தமிழ்நாட்டில் இதுவரை 5,12,56,034 டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. 3,81,12,041 பேருக்கு ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. 1,31,43,993 பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 30 ஆயிரம் முகாம் நடத்தப்படுகிறது. பெரு நகரங்கள் மட்டுமின்றி சிறு நகரங்களையும், கிராமங்களையும் குறி வைத்து முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எத்தனை

எத்தனை

இந்த நிலையில் கொரோனா வேக்சின் சிறப்பு முகாம்கள் நடக்கும் ஒவ்வொரு வாரமும் முதல்வர் ஸ்டாலின் முகாமில் பார்வையிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். சென்னையில் எங்கெங்கு சிறப்பு முகாம்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார். மக்களிடம் நேரடியாக முகாம்களில் விசாரித்து அவர்களின் அனுபவம் குறித்து கேட்டு வருகிறார்.

சென்னையில் வேக்சின் முகாம்

சென்னையில் வேக்சின் முகாம்

இந்த முறையும் அதேபோல் சென்னையில் வேக்சின் முகாம் நடக்கும் பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். சின்னமலை, புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப் பள்ளியில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி, சுகாதாரத்துரை அமைச்சர் ம. சுப்பிரமணியன் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினுடன் இருந்தனர்.

முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்

முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்

வேக்சின் முகாம் ஏற்பாடு எல்லாம் எப்படி இருக்கிறது.. வேக்சின் போட்டுக்கொள்ள சரியான ஏற்பாடுகள் உள்ளனவா என்று கேள்வி எழுப்பினார். முதல்வரின் வருகையை பார்த்து அங்கிருந்த மக்கள் திகைத்து அதன்பின் அங்கு வேக்சின் போட்ட மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். வேக்சின் முகாமிற்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி, வேக்சின் போட்டுக்கொண்டதற்கு நன்றி. ஓய்வு எடுக்கவும் என்று கூறி அறிவுரை வழங்கினார். அதோடு உங்கள் உறவினர்கள், நண்பர்கள் வேக்சின் போடாமல் இருந்தால் அவர்களையும் வேக்சின் போட சொல்லுங்கள், என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+