கொரோனா: தமிழகத்தில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரிப்பு தொடருகிறது! இன்றும் 6,005 பேர் குணமடைந்தனர்
சென்னை: தமிழகத்தில் மேலும் 5834 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 6,005 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மேலும் கொரோனாவால் ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடத்தில் இருந்து வருகிறது. மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகாவில்தான் கொரோனாவுக்கு தமிழகத்தைவிட அதிகம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 5834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு 6,005 பேர் குணமடைந்தும் உள்ளனர்.
இன்னொரு பக்கம் கொரோனாவால் மொத்தம் 118 பேர் ஒரே நாளில் உயிரிழந்தும் உள்ளனர். தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,08,649 ஆக அதிகரித்தது. கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் இந்திய அளவில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆனவர்கள் மொத்த எண்ணிகை 2,50,680 ஆகவும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 5,159 ஆகும். தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 52,810 மட்டுமே என்கிறது சுகாதாரத்துறை அமைச்சக அறிக்கை.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications