தமிழ்நாட்டில் 6,162 பேருக்கு கொரோனா உறுதி.. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 50,000-க்கும் கீழ் குறைவு!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 6,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 155 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 34-வது நாளாக குறைந்துள்ளது. கோவையில் பாதிப்பு தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.

6,162 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது ஊரடங்கு தந்த பலன் காரணமாக கொரோனா 2-வது அலை கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குணமடைந்தோர் எண்ணிக்கை
இதனால் மொத்த பாதிப்பு 24,49,577 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 155 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு 15 பேர் இறந்துள்ளனர். கோவையில் மேலும் 12 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 31,901 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 9,046 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 23,67,831 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்

கோவை முதலிடம்
49,845 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,67,268 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 3,10,18,415 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 372 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 7-வது நாளாக பாதிப்பு 500-க்கும் கீழே குறைந்து விட்டது. சென்னையை விட கோவையில் பாதிப்பு தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. கோவையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

மதுரையில் குறைவு
கோவையில் மட்டும் 756 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 262 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 86 பேருக்கும், மதுரையில் 112 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 115 பேருக்கும், திருவள்ளூரில் 169 பேருக்கும், திருச்சியில் 235 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 386 பேருக்கும், விருதுநகரில் 82 பேருக்கும், ஈரோட்டில் 641 பேருக்கும், சேலத்தில் 419 பேருக்கும், நாமக்கல்லில் 257 பேருக்கும், தஞ்சாவூரில் 305 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications