தமிழகத்தில் 2 லட்சத்தை தாண்டிய பாதிப்பு.. இன்று மட்டும் 6,988 பேருக்கு கொரோனா
சென்னை: தமிழகத்தில் 3ஆவது நாளாக இன்று கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது. அதாவது 6,988 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் கொரோனா பாதிப்பு குறித்த செய்திக் குறிப்பை சுகாதாரத் துறை வெளியிட்டது.
இதில் இன்றைய தினம் மேலும் 6,988 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,06,737 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு
கடந்த வியாழக்கிழமை முதல் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6000-த்தை தாண்டியது. நேற்று 6,785 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தற்போது 3-ஆவது நாளாக தொடர்ந்து 6 ஆயிரத்தை தாண்டியது. இது என்னதான் கவலையளிக்கும் செய்தி என்றாலும் தினமும் கொரோனா பரிசோதனைகள் அதிகரிப்பது வரவேற்கத்தக்கது.

சளி மாதிரிகள்
இன்றைய நிலவரபடி தமிழகத்தில் மொத்தம் 6,926 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சர்வதேச விமானம், உள்நாட்டு விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக வந்த 62 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இன்று 64, 315 பேரின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

சேம்பிள்கள்
அது போல் இதுவரை 22,87,334 பேருக்கு சளி மாதிரி எடுத்து கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று மட்டும் 61,729 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதுவரை 22,00, 433 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. இன்று வெளியான கொரோனா முடிவுகளில் 4,164 ஆண்களுக்கும் 2,824 பெண்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

89 பேர் பலி
தமிழகத்தில் 115 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று மட்டும் 7,758 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அது போல் இதுவரை 1,51,055 பேர் கொரோனாவால் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 89 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 3,409 பேர் பலியாகிவிட்டனர்.
Recommended Video

சென்னையில் பாதிப்பு எவ்வளவு
சென்னையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையான 1,329-வுடன் சேர்த்து இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 93,537 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் சென்னையிலிருந்து 1131 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் சென்னையில் கொரோனாவுக்கு 20 பேர் பலியாகிவிட்டனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications