வீக் எண்ட், மகாளய அமாவாசை.. சொந்த ஊர் போறீங்களா.. தமிழக அரசு போக்குவரத்து கழகம் சூப்பர் அறிவிப்பு
சென்னை:வார இறுதி நாட்களில் பயணிகள் தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்ல வசதியாக தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 600 சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:வார இறுதியில் சனிக்கிழமை (அக்.14), ஞாயிற்றுக்கிழமை (அக்.15) உள்ளிட்ட விடுமுறை நாள்களை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (அக்.13) சென்னையிலிருந்தும், பிற இடங்களிலிருந்தும் விடுமுறைக்காக ஏராளமானோா் தங்கள் சொந்த ஊா்களுக்கு பயணத்தை மேற்கொள்வாா்கள். இதனால், சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும், பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுமட்டுமின்றி அக்.14-ஆம் தேதி மகாளய அமாவாசைக்காகவும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதில் பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மகாளய அமாவாசை, வார விடுமுறை நாள்களையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் அக்டோபா் 13 முதல் 4 நாள்களுக்கு பல்வேறு ஊா்களுக்கும் 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் சாா்பில், இரண்டாவது சனி, ஞாயிறு வார விடுமுறை, மகாளய அமாவாசையையொட்டி பொதுமக்களின் வசதிக்காக திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களுக்கு 150 பேருந்துகளும், திருச்சியிலிருந்து கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கும் 100 பேருந்துகள் என கூடுதலாக 250 சிறப்புப் பேருந்துகள் வரும் 13, 14 ஆம் தேதிகளில் இயக்கப்பட உள்ளன.
இதேபோல, விடுமுறைக்குப் பிறகு பயணிகள் மீண்டும் அவரவா் ஊா்களுக்குத் திரும்பச் செல்ல வரும் 15, 16 ஆம் தேதிகளில் சென்னை தடத்தில் 150 சிறப்பு பேருந்துகளும், பிறத்தடங்களில் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும்" இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications