Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெருங்கடல் மிச்சம்! இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட.. 600 மில்லியன் வருட பழைய நீர்! திக்திக் செய்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இமயமலை பகுதியில் ஒரு காலத்தில் ஓடிய கடலின் நீர் துளிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளார். இந்திய அறிவியல் நிறுவனம் மற்றும் நிகட்டா பல்கலைக்கழகம் ஜப்பான் இரண்டின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.

அங்கே கண்டுபிடிக்கப்பட்ட கடல் நீரின் துளிகள் 600 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்திய அறிவியல் மையத்தின் புவி அறிவியல் மையத்தின் பேராசிரியரும் ஆய்வின் தொடர்புடைய ஆசிரியருமான சஜீவ் கிருஷ்ணன் இது தொடர்பாக பேசுகையில், கடந்த 5 வருடங்களாக இந்த ஆய்வை மேற்கொண்டு வந்தோம்.

600 Million water droplets found under the Himalayas rock by researchers

புவி அடுக்குகள் நகருவதை வைத்து இந்த ஆய்வை மேற்கொண்டோம். இமாலயா, நாகலாந்து பெல்ட் பகுதிகள் நகர்ந்ததை வைத்து இந்த ஆய்வை மேற்கொண்டோம். கடந்த 5 வருட ஆய்வின் முடிவில் இந்த நீர் பகுதி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுவில் ஐஐஎஸ்சியின் மூன்று ஆராய்ச்சியாளர்கள், சஞ்சீவ் மற்றும் இரண்டு மாணவர்கள் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் மற்றும் மாணவர் ஆகியோர் அடங்கி இருந்தனர். இந்த ஆய்வின் போது அந்த குழு இந்த பாறைகளை கண்டுபிடித்து அதில் ஆய்வுகளை செய்து அங்கே நீர் துளிகள் இருந்ததை கண்டுபிடித்து உள்ளனர்.

கண்டுபிடிப்பு: கடலுக்கு அடியில் காணப்படும் கற்கள் இங்கே கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கடலுக்கு அடியில் இருக்கு கற்கள் இருப்பதாலும் அங்கே கடல் இருந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில் மேற்கொள்ளப்பட்ட கார்பன் டேட்டிங் சோதனையில் அவை 600 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் இங்கே கடலுக்கு அடியில் இருக்கும் படிமங்கள் காணப்பட்டதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இமயமலையில் உள்ள அமிர்தபூரிலிருந்து மிலாம் பனிப்பாறை வரையிலும், டேராடூனில் இருந்து கங்கோத்ரி பனிப்பாறை வரையிலும் பரந்து விரிந்திருக்கும் மேற்கு குமாவூன் பகுதியின் நீண்ட பகுதி முழுவதும் இந்த பாறைகள் மற்றும் நீர் தோழிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

கடல் எப்போதுமே பல அதிசயங்களை சுமந்து இருக்கும். மனிதன் பூமிக்கே மேலே இருக்கும் நட்சத்திரங்கள், கிரகங்கள் குறித்தெல்லாம் ஆராய்ச்சி செய்து வருகிறான். ஏன் நிலவிற்கு கூட மனிதன் சென்றுவிட்டு திரும்பிவிட்டான். அதோடு செவ்வாய்க்கு பல ரோபோக்களையும் அனுப்பிவிட்டான். ஆனால் இது வரை பூமிக்கு அடியில் இருக்கும் பல அதிசயங்களை மனிதன் முழுமையாக கண்டுபிடிக்கவில்லை.

முக்கியமாக கடலுக்கு அடியில் இருக்கும் பல விஷயங்கள் மனித குலத்திற்கு மர்மமாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் கூட ஆஸ்திரேலியாவில் கடலுக்கு அடியில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் பல விசித்திரமான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டு உள்ளன. ஆஸ்திரேலியா மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள இரண்டு கடல் பகுதிகளில் இந்த ஆய்வுகளை அவர்கள் செய்து உள்ளனர். இந்த ஆராய்ச்சியில் பல விசித்திரமான மீன்களை அவர்கள் பார்த்து உள்ளனர், வித்தியாசமான பறவைகள் போன்ற தோற்றம் கொண்ட மீன்கள். இவை வினோதமான தோற்றத்துடன் காணப்பட்டு உள்ளன.

Sciencealert என்ற ஆராய்ச்சி இதழில் இது தொடர்பாக ஆய்வுக்கட்டுரை வெளியாகி உள்ளது. இந்த கடல் பகுதி டைனோசர் காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடலுக்கு இடையில் இருக்கும் பகுதி இது. இங்குதான் விசித்திரமான உயிரினங்கள் கண்டுபிடுக்கப்பட்டு உள்ளன. கடலுக்கு அடியில் இதுவரை மனித குலம் பார்த்திடாத மீன் வகைகள், உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பான புகைப்படங்களையும் அவர்கள் வெளியிட்டு உள்ளனர்.

இந்த நிலையில்தான் தற்போது இமயமலை பகுதியில் ஒரு காலத்தில் ஓடிய கடலின் நீர் துளிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இந்திய அறிவியல் நிறுவனம் மற்றும் நிகட்டா பல்கலைக்கழகம் ஜப்பான் இரண்டின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+