தமிழ்நாட்டில்.. ரூ.950 கோடியில் ரெடியாகும் 6000 அடுக்குமாடி குடியிருப்புகள்.. தமிழக அரசின் வேற லெவல்
சென்னை: தமிழகத்தில் 21 திட்டப்பகுதிகளில் ரூ.1,330 கோடியில் 7,724 வீடுகள் கட்டும் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
10 வருடங்கள் கழித்து ஆட்சி பொறுப்பை திமுக ஏற்றதுமே, தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையில் பெருத்த கவனத்தை செலுத்தி வருகிறது.. முக்கியமாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், இடியும் நிலையில் உள்ள பழைய குடியிருப்புகளை கணக்கெடுக்கும்படி முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
புதிய வீடுகள்: அதன்படியே, சென்னையில் 27,138 வீடுகளும் மற்றும் பிற மாவட்டங்களில் 3,354 வீடுகளும் மொத்தம் 30,492 பழைய வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டது.

கடந்த 2021-22 மற்றும் 2022-23 நிதியாண்டுகளில் ரூ.2,400 கோடியில் 15,000 புதிய வீடுகள் கட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படியே, 30 திட்டப்பகுதிகளில் 7,582 வீடுகள் இடிக்கப்பட்டு ரூ.1627.97 கோடியில் 9,522 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கடந்தவாரம்கூட, ரூ.105.13 கோடியில் 579 புதிய குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
வாரிய பணிகள்: இந்நிலையில், தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மகிழ்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் வாரிய பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:
மறுகட்டுமான திட்டத்தின் கீழ் 2021-22 மற்றும் 2022-23 நிதியாண்டுகளில் ரூ.2,400 கோடி மதிப்பீட்டில் 15,000 புதிய வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதனடிப்படையில் 30 திட்டப்பகுதிகளில் 7582 வீடுகள் இடிக்கப்பட்டு ரூ.1627.88 கோடியில் 9,522 வீடுகள் கட்ட உத்தரவிடப்பட்டது. இதில் 21 திட்டப்பகுதிகளில் ரூ.1,330.43 கோடியில் 7,724 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 திட்டப்பகுதிகளில் 297.45 கோடி மதிப்பீட்டில் 1,798 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகள்: ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் பல்வேறு மாவட்டங்களில் 6,000 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.950 கோடியில் திட்டமிடப்பட்டது. இதில் தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் திட்டப்பகுதியில் ரூ.149.32 கோடியில் 969 குடியிருப்புகளும், சிவகங்கை மாவட்டம் கழனிவாசல் திட்டப்பகுதியில் ரூ.130.23 கோடியில் 900 குடியிருப்புகளும், திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார் பகுதி திட்டப்பகுதியில் ரூ.139.80 கோடியில் 876 குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகிறது.
90 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்ட திட்டப்பகுதிகள் அடுத்த மூன்று மாதங்களில் முடித்து ஏழை எளிய மக்களுக்கு விரைந்து ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குடியிருப்புதாரர்கள் தாங்கள் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய தொகையினை செலுத்த வலியுறுத்தி மனை மற்றும் குடியிருப்பிற்கான கிரய பத்திரங்களை அதிகாரிகள் வழங்க வேண்டும்.
மேம்பாட்டு பயிற்சிகள்: வாரிய திட்டப்பகுதிகளில் குடியிருக்கும் மக்களின் திறன் மேம்பாட்டினை மேம்படுத்துவதற்காக திறன் மேம்பாட்டு பயிற்சிகள் தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தாட்கோ மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கடந்த 2 வருடங்களில் 4988 பேருக்கு இலகுரக வாகன ஓட்டுநர், அழகுக்கலை, ஆட்டோ ஓட்டுநர், துரித உணவு தயாரித்தல், மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் பழுதுபார்த்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை












Click it and Unblock the Notifications