சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"முடிச்சிட்டீங்களா".. வாக்காளர் அட்டை + ஆதார் எண் இணைப்பு: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்காக இதுவரை 61 சதவீதம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள், இறந்தவர் பெயர்கள் நீக்கம் இவற்றுக்காக ஆதார் எண்ணை இணைக்கும்படி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது.. இதற்காக 6-பி என்ற படிவம் வெளியிடப்பட்டது.

அதனை பூர்த்தி செய்து, வீட்டுக்கு வரும் வாக்காளர் பதிவு அலுவலரிடம் வழங்கலாம் என்றும், தேசிய வாக்காளர் பதிவு இணையதளத்தின் மூலம் ஆதார் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது...

100-வது பிறந்த நாளில் தாயார் சொன்ன விஷயம் எப்போதும் நினைவில் இருக்கும் - பிரதமர் மோடி உருக்கம் 100-வது பிறந்த நாளில் தாயார் சொன்ன விஷயம் எப்போதும் நினைவில் இருக்கும் - பிரதமர் மோடி உருக்கம்

விண்ணப்பம்

விண்ணப்பம்

அதன்படி, வாக்காளர் பட்டியலுடன், ஆதார் இணைப்புக்கு வாக்காளர்கள் விண்ணப்பித்தும் வருகின்றனர். அனைத்து மாநிலங்களிலும் இந்த பணி வேகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.. அந்த வகையில், தமிழ்நாட்டில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி 6 கோடியே 18 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த வாக்காளர்களின் ஆதார் எண்ணை முழுமையாக இணைக்க ஒவ்வொரு மாவட்டங்களிலும் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நெட்சென்டர்

நெட்சென்டர்

ஆன்லைன், தனியார் 'நெட்சென்டர்' இ-சேவை மையங்கள் மூலமாக ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்து இருப்பதால் ஆதார் எண்ணை இணைக்க பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்... இந்த பணியை வேகப்படுத்துவதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு நேற்றைய தினம் ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டார்... சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக இந்த கூட்டத்தை நடத்தினார்.
இணைப்பு

இணைப்பு

அப்போது, அந்தந்த மாவட்டங்களில் எவ்வளவு பேர் இதுவரை ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர் என்ற விவரங்களை கேட்டறிந்தார்... இதுபற்றிய விவரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி இந்த பணிகளை 100 சதவீதம் விரைந்து முடிக்குமாறு சத்யபிரதாசாகு கேட்டுக் கொண்டார். முன்னதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ இதை பற்றி சொல்லும்போது, "ஆதார் எண் இணைப்பு பணிகள் தொடங்கி 4 மாதம் முடிவுறும் நிலையில், இதுவரை தமிழகத்தில் உள்ள 6.18 கோடி வாக்காளர்களில் 61 சதவீதம் பேர் ஆதார் இணைப்புக்கு விண்ணப்பித்துள்ளனர்.

திருத்தப்பணி

திருத்தப்பணி


அதிகபட்சமாக அரியலூரில் 91.4 சதவீதம், கள்ளக்குறிச்சியில் 89.03 சதவீதம், தருமபுரியில் 81.62 சதவீதம் பேர் விண்ணப்பித்துள்ளனர். குறைந்தபட்சமாக சென்னையில் 30.4 சதவீதம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மார்ச் 31-ம் தேதி வரை இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும்.. இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 5-ம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் முடிவடைந்துள்ளன என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
61 percent applications to link aadhaar with voter list, says tamil nadu Chiefelectoral officer
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X