உயிர கைல புடிச்சுக்கிட்டு.. இஸ்ரேலில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 61 பேர்! அந்த 67 பேர் நிலை?
சென்னை: இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே போர் தீவிரமடைந்து இருக்கும் நிலையில், அங்கு சிக்கித் தவித்து வரும் தமிழர்களில் முதற்கட்டமாக 61 பேர் டெல்லி அழைத்து வரப்பட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் இல்லம் வரை அழைத்து சென்று விடப்பட்டு உள்ளார்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில், "இஸ்ரேல் பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையேயான போர் தற்போது தீவிரமடைந்த நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைகினங்க தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட உதவி எண்கள் மூலம் அங்கு சிக்கித் தவித்த 128 தமிழர்களின் தகவல்கள் அறியப்பட்டது. இவர்களில் நேற்று 13.10.2023 அன்று முதற் கட்டமாக புது தில்லி வந்த 21 தமிழர்கள் அவர்களது இல்லம் வரை தமிழ்நாடு அரசின் சார்பில் அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில் இரண்டாம் கட்டமாக இன்று 14.10.2023 மதுரை, திண்டுக்கல். கரூர், தென்காசி, தர்மபுரி, திருப்பூர், திருவண்ணாமலை, திருச்சி. சென்னை, விழுப்புரம், திருப்பத்தூர், சேலம், கோயம்புத்தூர் முதலிய மாவட்டங்களைச் சேர்ந்த 28 தமிழர்கள் இஸ்ரேலில் இருந்து சிறப்பு விமானத்தில் இன்று காலை 06.00 மணிக்கு புது டெல்லி வந்தடைந்தனர்.
புது டெல்லி விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அவர்களை வரவேற்று அவர்களுக்கு காலை உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தமிழ்நாடு அரசு செலவில் விமான பயண சீட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்களில் 16 தமிழர்கள் சென்னை விமான நிலையத்திற்கும், 12 தமிழர்கள் கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கும் வந்தடைந்தனர். மேலும் அரசின் தரப்பில் அவர்கள் சொந்த மாவட்டங்கள் செல்ல வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்த 16 தமிழர்களை தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. செஞ்சி கே. எஸ். மஸ்தான் அவர்கள். அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் திருமதி. ஜெசிந்தா லாசரஸ் இ.ஆ.ப.. மற்றும் துறை அலுவலர்கள் வரவேற்று, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தடைந்த 12 தமிழர்களையும், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வரவேற்று அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். இதுவரை, இந்நேர்வில் இஸ்ரேலில் இருந்து 49 தமிழர்கள் ஆபரேஷன் அஜய் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பிலும், 12 தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலும் தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications