சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

63 வருசத்துக்கு முன் தமிழகம் வந்த சீன பிரதமர்.. வரவேற்பு புத்தகத்தில் வியந்து எழுதிய வரிகள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    சீன அதிபர் வருகை... உச்சகட்ட பரபரப்பில் சென்னை

    சென்னை: 63 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் வந்த அப்போதைய சீன பிரதமர் சூ என்லாய் ஜெமினி ஸ்டுடியோ, சென்னை பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை மற்றும் மாமல்லபுரத்தையும் சுற்றிப்பார்த்துவிட்டு சென்றார்.

    தமிழகத்தின் சென்னைக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று வருகை தந்துள்ளார். அவருக்கு தமிழர்கள் மிகப்பெரிய அளவில் தங்களின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் முன்னதாகவே 63 ஆண்டுகளுக்கு முன்பே அதாவாது 1956ம் ஆண்டு சீனாவின் அன்றை பிரதமர் சூ என்லாய் தமிழகம் வந்திருக்கிறார், அப்போது
    சென்னை மாகாண முதல்வராக காமராஜரும் ஆளுநராக ஸ்ரீபிரகாசாவும் இருந்தனர். 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி சென்னை வந்த சீன பிரதமர் சூ என்லாய்க்கு இன்றைய நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் சிறப்பான வரவேற்பு அளித்தது அரசு.

    சீன அதிபரை வியக்க வைத்த பத்மினி.. சுற்றி சுழன்றாடிய கால்கள்.. விழி விரிய வைத்த நாட்டிய தாரகை!சீன அதிபரை வியக்க வைத்த பத்மினி.. சுற்றி சுழன்றாடிய கால்கள்.. விழி விரிய வைத்த நாட்டிய தாரகை!

    ஜெமினி ஸ்டுடியோ

    ஜெமினி ஸ்டுடியோ

    இரண்டு நாள் பயணமாக வந்த சீன பிரதமர் சூ என்லாய், ஜெமினி ஸ்டியோவில் நடந்த படப்பிடிப்பை பார்த்து வியந்தார். பின்னர் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையை சுற்றிப்பார்த்தவர், அங்கு வைக்கப்பட்டு இருந்த வரவேற்பு புத்தகத்தில் "இப்படி நவீனமாக ரயில் பெட்டி தயாரிப்பது சிறப்பாக உள்ளது. இந்தியா இதில் பெருமை கொள்ள வேண்டும்" என எழுதி இருக்கிறார்.

    இரவு விருந்து

    இரவு விருந்து

    அன்றைக்கு இரவு அதாவது டிசம்பர் 6ம் தேதி இரவு சென்னை மாகாண ஆளுநர் ஸ்ரீபிரகாசா விருந்து அளித்தார். அவருக்கு ஜி.யு. போப்பின் திருக்குறள் ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்ட புத்தகத்தையும் அவர் வழங்கினார்.

    சீனாவுடன் தொடர்பு

    சீனாவுடன் தொடர்பு

    இரண்டாவது நாள் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக மாமல்லபுரம் சென்று பல்லவர்களின் சிற்பங்களை கண்டு மகிழ்ச்சி அடைந்தார். அவரிடம் மாமல்லபுரத்திற்கும், புத்தமதத்திற்கும் சீனாவில் உள்ள வரலாற்றுத் தகவல்கள் குறித்து அப்போது இருந்த தலைவர்கள் விரிவாக எடுத்துக்கூறினார்கள். அத்துடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து அவரை அன்றைக்கு மகிழ்ச்சியோடு வழிஅனுப்பி வைத்தது தமிழகம்.

    மாமல்லபுரம் செல்லும் அதிபர்

    மாமல்லபுரம் செல்லும் அதிபர்

    இப்போது 63 ஆண்டுகளுக்கு பின்னர் அவரைப்போலவே சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னைக்கு வந்துள்ளார். சென்னையில் இருந்து மாமல்லபுரம், மீண்டும், சென்னை, நாளை கோவளம், மீண்டும் சென்னை என சாலைமார்க்கமாக பயணம் செய்கிறார். அவர் மாமல்லபுரம் கோவளத்தை தவிர எந்த இடத்தையும் இறங்கி சுற்றிப்பார்ப்பாரா என்பது தெரியாது. இருப்பினும் வாகனத்தில் இருந்தபடி சுற்றிப்பார்க்க போகிறார்.

    English summary
    63 years ago, china Prime Minister Zhou Enlai visited on Tamil Nadu, he what written in the welcome book . he visited jemini studio and perambur rail factory
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X