சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

₹600 கோடி எடப்பாடியின் "நடுக்கம்".. இங்கேயே கிளம்பி "அவர்" வருகிறாராமே.. கைவிடுமா மேலிடம்? என்னாகும்

தமிழகம் வரும் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி பழனிசாமியை டெல்லி, கை விட்டுவிட்டது என்ற தகவல்கள் வட்டமடித்து வரும் நிலையில், தமிழகம் வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, எடப்பாடி பழனிசாமி சென்று சந்திக்கக்கூடுமா? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் ஆண்டு விழாவானது வரும் நவம்பர் மாதம் 12ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பை ஏற்று அமித்ஷா நவம்பர் 12ல் தமிழகம் வருகிறார் என்ற தகவல் வெளியாகி வருகிறது.. மேலும், தமிழக பாஜக நிர்வாகிகளுடன் 2024 சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்க உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அலைய விட்டாங்கல்ல.. பேசாமலேயே இருப்போம்ணே! ஓடி வந்த ஓபிஎஸ்! அமைதி காக்கும் எடப்பாடி! கடுப்பான பாஜக? அலைய விட்டாங்கல்ல.. பேசாமலேயே இருப்போம்ணே! ஓடி வந்த ஓபிஎஸ்! அமைதி காக்கும் எடப்பாடி! கடுப்பான பாஜக?

 தனி ரூட்

தனி ரூட்

அந்தவகையில், அதிமுக விவகாரம் குறித்தும் அமித்ஷா பேசுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை டெல்லியில் சந்தித்து பேசியபோது, சில தகவல்கள் மீடியாவில் வெளியாகின.. குறிப்பாக, "தனித்தனியாக செயல்பட்டால், ஓட்டுக்கள் பிரிவது சரியல்ல, ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் சேர்த்து கொள்ள வேண்டும்" என அமித்ஷா தன்னுடைய கவலையை எடப்பாடியிடம் வெளிப்படுத்தியதாக தெரிகிறது.. ஆனால், இதற்கு எடப்பாடி பழனிசாமியோ, வழக்கம்போலவே மறுத்துவிட்டாராம்..

 திக் திக்

திக் திக்

"கடந்த சில வாரங்களாகவே, தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் பயணம் செய்து வருகிறேன்.. எங்குமே ஓபிஎஸ்க்காக பலம் காணப்படவில்லை.. அதனால் இல்லாவிட்டாலும் கட்சி பலமாகவே என்றைக்கும் இருக்கும்.. நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் எண்ணிக்கை அளவில் தம்முடைய ஆதரவாளர்களே அதிகம் இருக்கிறார்கள்.. அந்த அடிப்படையில் பாஜக மேலிடம் தன்னுடன் மட்டுமே இனி தேர்தல் மற்றும் அரசியல் உறவை தொடர வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டாராம்..

 அப்பாயிண்ட்மென்ட்

அப்பாயிண்ட்மென்ட்

எனினும் அமித்ஷா, தான் சொல்ல வந்த விஷயத்தில் மட்டும் உறுதியாக இருந்ததாகவும், இதன் காரணமாகவே, பிரதமர் மோடியை சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் எதுவும் எடப்பாடிக்கு தரப்படவில்லை என்றும், அண்ணாமலை மூலம் டெல்லியில் பிரதமரை சந்தித்தபோதுகூட, வெறும் நலம் விசாரிப்புடன் நிறுத்திக் கொண்டு, அரசியல் விவகாரம் பேச மறுத்துவிட்டதாகவும் சலசலக்கப்பட்டது. மேலும், எம்பி தேர்தலுக்கும் இன்னும் டைம் இருப்பதால், இப்போதைக்கு அதிமுக விஷயத்தில் தலையிடாமல் மேலிடம் ஒதுங்கியிருப்பதாக சொன்னார்கள்.

 மாஸ் கூட்டணி

மாஸ் கூட்டணி

ஆனால், இப்போது தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் கணக்கை கையில் எடுத்துள்ளன.. பல்வேறுகட்ட வியூகங்களில் முனைப்பு காட்ட ஆரம்பித்துவிட்டன.. டிடிவி தினகரனுடன் கூட்டணி வைக்க தயார் என்று ஓபிஎஸ் அறிவித்துவிட்டார்.. தேவைப்பட்டால் டிடிவியை சந்திக்கவும் தயார் என்றும் சொல்லிவிட்டார்.. "மெகா கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிடும்" என்று எடப்பாடியும் மற்றொருபக்கம் அறிவித்துவிட்டார் என்றாலும், ஓபிஎஸ் மீதான தன் பிடிவாதத்தை மட்டும் இப்போதுவரை தளர்த்தி கொள்ளவே இல்லை.. இந்நிலையில், அமித்ஷா சென்னை வரும்நிலையில், எடப்பாடி பழனிசாமி அவரை சென்று சந்திப்பாரா? அப்பாயிண்ட்மென்ட் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது..

 அதிர்ச்சி

அதிர்ச்சி

இதுகுறித்து 2 விதமான யூகங்கள் வட்டமடிக்கின்றன.. தொடர்ந்து பாஜகவுக்கு எரிச்சல் ஊட்டும் விதமாகவே எடப்பாடியின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன.. எடப்பாடி தலைமையில் கூட்டணி வைக்கும்போது, ஒவ்வொரு முறை தேர்தலின்போதும் தங்களுக்கு சொற்ப தொகுதிகளையே ஒதுக்கப்பட்டுவிடுவதால், இந்த முறை, தங்களுடைய தலைமையில்தான் மெகா கூட்டணி அமைய வேண்டும் என்று பாஜக முயன்று வருகிறதாம்.. அதனால்தான், மெகா கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று எடப்பாடி கூறியுள்ளது, பாஜகவுக்கு மேலும் அதிர்ச்சியையே தந்துள்ளதாகவும், எனவே, எடப்பாடியை கழட்டிவிட்டு, புதுகூட்டணியை தங்கள் தலைமையில் அமைக்க பாஜக முயலும் என்று ஒருசாரார் சொல்கிறார்கள்.

 விசிக + திமுக

விசிக + திமுக

மற்றொரு தரப்பிலோ, பாஜகவை பகைத்து கொண்டு எந்த காலத்திலும் எடப்பாடியால் அரசியல் செய்ய முடியாது என்கிறார்கள்.. 2 நாட்களுக்கு முன்புவந்த, 10 சதவீத இடஒதுக்கீடு விஷயத்தில் அதிமுக அமைதி காக்கிறது. இதுவரை வாயே திறக்கலையே ஏன்? நியாயப்படி பாமக, திமுக, விசிக நிலைப்பாட்டைதான் எடப்பாடியும் வெளிப்படுத்தி இருக்க வேண்டும்.. 69 சதவீதம் இடஒதுக்கீட்டை கொண்டு வந்ததே ஜெ.தான்.. அப்படியானால் இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பேசியிருக்க வேண்டும்தானே? 69 சதவீதம் இடஒதுக்கீட்டை ஒழித்துவிடுவார்கள் என்றே பலரும் கருத்துதெரிவித்து வரும்போது, இதை பற்றி எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் பேசியிருக்க வேண்டும்தானே?

 சரணாகதி

சரணாகதி

ஏன் என்றால் பாஜகவை பார்த்து எடப்பாடி பயப்படுகிறார்.. டிடிவிகூட தவறு என்று சொல்லிவிட்டார்.. ஆனால், ஓபிஎஸ் + எடப்பாடி இருவருமே வாய் திறக்கலையே.. பாஜக காலடியில் கட்சியை வைத்துவிட்டார்களே இவர்கள் இருவரும்.. எனவே, எந்த காலத்திலும் பாஜகவை எதிர்க்க இவர்கள் துணிய மாட்டார்கள்.. சரணாகதிதான் அடைவார்கள்.. இதில், ஓபிஎஸ்ஸின் சரணாகதி வெளியே தெரிகிறது.. எடப்பாடி பழனிசாமியின் சரணாகதி அப்பட்டமாக காட்டிக் கொள்ளப்படவில்லையே தவிர, நடுக்கம் அவருக்குள் இருக்கவே செய்கிறது என்கிறார்கள்.

 666 கோடி ரூபாய்

666 கோடி ரூபாய்


இன்னொரு காரணமும் சொல்கிறார்கள்.. எடியூரப்பாவின் அமைச்சரவையில் இருந்த அமைச்சருக்கு 666 கோடி ரூபாய் கட்டிடம் ஒன்றை கட்டுவதற்காக 12 கோடி ரூபாய் லஞ்சப்பணத்தை எடப்பாடியின் சம்பந்தி மகன் கொண்டு போய், தந்துள்ளார்.. இது தொடர்பான வழக்குகளில் இருந்து காப்பாற்றுவதற்காக, அமித்ஷாவையே டெல்லி சென்று எடப்பாடி சந்தித்தாக, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள்.. அத்துடன், நாலாபக்கமும் வழக்குகள், குற்றச்சாட்டுகள், ரெய்டுகள், என நெருக்கடிகள் பெருகி வருவதால், பாஜகவை எந்த காலத்திலும் எதிர்க்க எடப்பாடி பழனிசாமிக்கு வாய்ப்பில்லை..

 செம டென்ஷன்

செம டென்ஷன்

அதாவது கட்சி ரீதியாக மட்டுமல்லாமல், சொந்த நலனுக்காகவும் பாஜகவின் தயவு தேவைப்படுவதால், அமித்ஷாவை மரியாதை நிமித்தமாவது, நிச்சயம் எடப்பாடி பழனிசாமி சந்திக்க வாய்ப்பிருக்கவே செய்கிறது என்கிறார்கள். ஒருவேளை அந்த சந்திப்பு இல்லாவிட்டாலும்கூட, 95 சதவீதம் நிர்வாகிகளை தன் வசம் வைத்துள்ள எடப்பாடியை, பாஜக அவ்வளவு லேசில் விட்டுவிடாது, வாக்கு வங்கியையும் சிதறடிக்க விடாது. ஓபிஎஸ், தினகரனை இணைத்து கொள்ளும்படி சற்று காட்டமாக மேலிடம் சொன்னால், அதற்கு நிச்சயம் எடப்பாடி பழனிசாமி பணியவே செய்வார் என்றெல்லாம் யூகங்கள் றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கின்றன.. அந்தவகையில், எடப்பாடியுடன் அமித்ஷா சந்திப்பு நடக்குமா? தவிர்க்கப்படுமா? தெரியவில்லை.. ஆக மொத்தம், அமித்ஷாவின் தமிழகம் வருகை மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது..

English summary
₹666 crore: Will Edappadi Palaniswami meet Amit Shah on the 12th in Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X