Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கசிந்த" ரகசியம்.. கோமாளி தலைவரை விடுங்க.. ரோஷமுள்ள ஆளுநர் "கமலாலயம்" போகலாமே.. ராஜீவ் காந்தி நறுக்

திமுகவின் செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி சிறப்பு பேட்டியை ஒன் இந்தியாவுக்கு தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குறிப்பிட்ட மதத்தை, குறிப்பிட்ட மொழியை, கொச்சைப்படுத்தி என்னவேண்டுமானாலும் செய்துவிட முடியும் என்று சாதித்து காட்டியவர் மோடி.. அது தமிழகத்திலும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே திமுக பதிலடியை தர வேண்டி இருக்கிறது என்று சொல்கிறார் திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி, சில விளக்கங்களை தந்திருந்தார்.

அதில், "கோவையில் வாக்கு வங்கியை தக்க வைக்க அண்ணாமலை அரசியல் செய்கிறார். ஜமேசா முபின் குறித்த எந்த கடிதமும் தமிழக அரசுக்கு மத்திய அரசால் அனுப்பப்படவில்லை. பாதுகாப்பை அதிகப்படுத்த மட்டுமே எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

மத்திய அரசின் அறிக்கையை அண்ணாமலைக்கு ஒரு அதிகாரி வழங்கியது போலவே, எனக்கும் வழங்கப்பட்டது. திமுக மீது அண்ணாமலை வைக்கும் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆதாரமில்லை, தன் சொந்த கட்சி தேவைக்காக மாநிலத்தை பதற்றமாக வைத்துள்ளார் அண்ணாமலை" என்று கூறியிருந்தார்.. இந்நிலையில், ராஜீவ் காந்தியை ஒன் இந்தியா தமிழுக்காக சிறப்பு நேர்காணல் செய்தோம்.. அந்த ஸ்பெஷல் பேட்டியில் ராஜீவ் காந்தி நம்முடன் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்தான் இவை:

 பளீர் பொய்கள்

பளீர் பொய்கள்

"அண்ணாமலையை பார்த்து இந்த அரசு திணறவில்லை.. ஆனால் அவர் பேசும்கருத்து, சமூக பதட்டத்தை உண்டுபண்ணி விடக்கூடாது என்பதற்காக, நாங்கள் ஒவ்வொன்றிற்கும் பேச வேண்டியிருக்கு.. காரணம், உண்மை, பொய் என்ற இரு விஷயங்களினாலேயே ஆட்சிகளை கவிழ்த்துவிட முடியும்.. கடந்த காலங்களில் இது நடந்துள்ளது.. எவ்வளவுதான் திமுக சிறப்பாக செயல்பட்டாலும், பொய் பேசி அவதூறு பரப்பவே ஒரு கும்பல் இருக்கத்தான் செய்கிறது.. இதுபோன்ற பொய்கள்தான் மாற்று கட்சியில் இருந்த எங்களை போன்றோரை எல்லாம் அப்போது இயக்கியது..

 அரைவேக்காட்டுத்தனம்

அரைவேக்காட்டுத்தனம்

குறிப்பிட்ட மதத்தை, குறிப்பிட்ட மொழியை, கொச்சைப்படுத்தி என்னவேண்டுமானாலும் செய்துவிட முடியும் என்று சாதித்து காட்டியவர் மோடி.. அது தமிழகத்திலும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே திமுக பதிலடியை தர வேண்டி இருக்கு.. சாராய அமைச்சர் என்று பொதுவெளியில் சொல்கிறார்.. எதை விதைக்கிறோமோ, அதைதானே அறுவடை செய்ய முடியும்.. அந்தவகையில், அண்ணாமலை அரைவேக்காட்டுத்தனமாக செயல்படுகிறார்.. கோமாளி போலவே அவரது நடவடிக்கைகள் இருக்கிறது.. இப்படிப்பட்ட அனுபவம் இல்லாதவர்கள் பேசுவதால்தான், அவர்கள் தூக்கிய ஆயுதத்தை வைத்தே, அவர்களை நாங்கள் அடிக்க வேண்டி உள்ளது..

 67% சான்ஸே இல்லை

67% சான்ஸே இல்லை

முபீன் என்பவர் ஏற்கனவே கண்காணிப்பு லிஸ்ட் இருந்ததால்தான், கோவை சம்பவம் நடந்த 4 மணி நேரத்தில் அவரது பெயர் உடனடியாக வெளியிட முடிந்தது.. இந்தியாவில் எத்தனையோ இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்து வருகின்றன.. இதுபோன்ற வழக்குகளில் 100-க்கு 67 விழுக்காடுகள், குண்டு வைத்தவர்களை கண்டுபிடிக்கவே முடியாது.. ஆனால், முபீன் பெயரை எப்படி மாநில அரசு உடனே சொல்ல முடிந்தது? முபீன் விசாரிக்கப்பட்டதால்தான் பெயரை சொல்ல முடிந்தது.. 2019-க்கு பிறகு, அதிலும் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, அவரை கண்காணிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறார் அண்ணாமலை.. மாநில அரசுக்கு முபீன் பற்றி எந்த தகவலையும் என்ஐஏ தரவில்லை..

 IPS ரகசிய அறிக்கை

IPS ரகசிய அறிக்கை

அண்ணாமலை தன்னை எல்லா இடத்திலும் ஐபிஎஸ் என்று குறிப்பிட்டு பேசுகிறார்.. அதனால்தான் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்று குறிப்பிட்டு காவல்துறை பதில் சொல்லி எச்சரித்துள்ளது.. கடந்த 27ம்தேதி என்ஐஏவிடம் ஒப்படைத்தாகிவிட்டது. 5 நாள் ஆயிற்றே.. ஏன் இதுவரை மோடி பேசவேயில்லை.. அந்த ரகசிய அறிக்கை எப்படி அண்ணாமலை கைக்கு போயிருக்கும் என தெரியவில்லை.. சில சமயங்களில் யாராவது இதை அவரிடம் தந்திருக்கலாம்.. காரணம், அவர் ஐபிஎஸ்ஸாக இருந்தவர்.. அந்த டாக்குமென்ட்டை வைத்து அவர் பொய் சொல்கிறபோது, அதை அவருக்கு தந்தவர் யார் என்பதையும் அரசு கண்டுபிடிக்கும்.. தவறு செய்திருந்தால் அந்த நபர் மீது நடவடிக்கையும் எடுக்கும்.. அதுக்காக இது ஒன்றும் ஊதி பெரிதாக்கப்பட வேண்டிய செய்தி கிடையாது..

 ரோஷம் + வேத மந்திரம்

ரோஷம் + வேத மந்திரம்

கோவை விஷயத்தை பொறுத்தவரை, மாநில, மத்திய அரசுகள் சேர்ந்துதான் செயல்பட வேண்டும்.. ஆனால், நம்முடைய ஒரே நோக்கம், அங்கு சமூக பதற்றம் இல்லாமல், மக்கள் தொழில் செய்ய வேண்டும்.. நிம்மதியாக வாழ வேண்டும்.. அதிகாரிகளை பயப்பட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.. அதுக்காக அரசின் தோல்வி என்று அர்த்தமா? இங்கே இருக்கிற ஆளுநர் தூங்கிட்டே இருக்காரு.. தூங்கி எழுந்துட்டு, தன் வேலையை செய்வதும் கிடையாது.. ஆளுநருக்கு சட்டம் தெரியாது, அதற்கு பதிலாக சனாதனம் பேசுவாரு.. வேத மந்திரத்தை படிப்பாரே தவிர, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை படிக்க மாட்டார்.. காரணம், அவர் ரோஷமுள்ள, மானமுள்ள ஆளுநர்..

 இரட்டை அரசா?

இரட்டை அரசா?

இரட்டை அரசு நடத்தும் மனப்பான்மையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.. அவருக்கு யதார்த்த சூழலை நாங்கள் புரிய வைக்க வேண்டி உள்ளது.. "உங்கள் பதவியை ராஜினாமா செய்துட்டு கமலாலயம் போங்கள், பாஜக தலைவராக வாருங்கள்.. அண்ணாமலை, வானதிக்கு போட்டியாக நீங்களும் ஒரு போட்டியாளராக வரலாம்.. அதனால் பதவியை ராஜினாமா செய்துட்டு அரசியல் செய்யுங்கள்" என்று தான் நாங்கள் சொல்கிறோம்.. இது இன்றைக்கு நேற்று பிரச்சனை இல்லை.. அரசியலமைப்பு சட்டம் ஆளுநர்களுக்கு இப்படியே அதிகாரங்களை தந்தால், எதிர்கொள்ள வேண்டி உள்ளது..

 ஆசை ஆசையாய்

ஆசை ஆசையாய்

திமுக என்பது வெறுமனே கட்சி பதவிக்கும் மட்டும் ஆசைப்பட்ட இயக்கம் கிடையாது.. அன்று தனி கட்சி ஆரம்பித்தபோதுகூட, தேர்தலில் போட்டியிடலாமா என்று கேட்பதற்கேகூட திமுகவுக்கு 5 வருட காலம் தேவைப்பட்டது.. ஒரு சமூக எண்ணம், சமூக சீராய்வு, சமூக நீதி, சமூநிலை சமூகம், மாவட்ட ஊரக வளர்ச்சி, பகுத்தறிவு, இவையாவும் அடங்கியதுதான் இந்த கட்சி.. ஆட்சியா? கட்சியா என்றால், கட்சிதான் முக்கியம் என்று சொல்லும்.. நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போதேகூட, எந்த ஆளுநர்களிடமும் சமரசம் செய்து கொள்ளவில்லை..

 பாத்ரூம் டோர்

பாத்ரூம் டோர்

கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீதான ஊழலை, அந்த அரசின் குறையை ஆளுநரிடம் நாங்கள் சுட்டிக்காட்டினோம்.. அதேசமயம், ஆளுநர் சுயமாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கூடாது, அதை ஒன்றிய அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.. ஒன்றிய அரசிடம் எங்கள் குறைகளை சொல்வதுதான் ஆளுநரின் பணியே தவிர, தானே அதிகாரத்தை கையில் எடுக்கக்கூடாது.. அப்படிப்பட்ட ஆளுநர், கோவை வீதிக்கு வந்து கழிப்பறை எல்லாம் சரியாக இருக்கிறதா? கதவுகள் சரியாக இருக்கிறதா? என்று செக் செய்தால், அது உன் டியூட்டி இல்லை, வெளியே போ என்கிறோம்.. அவ்வளவுதான்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+