சதுப்பு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தாரா நடிகர் பிரகாஷ் ராஜ்.. அதிகாரிகள் ஆய்வில் திடுக் தகவல்
சென்னை: கொடைக்கானலில் வில்பட்டி பகுதியில் விதிகளை மீறி நடிகர் பிரகாஷ் ராஜ் சாலை பகுதியை ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் பெயரில் பட்டா இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
குளு குளு பிரதேசமான கொடைக்கானலில் பேத்துப்பாறை பகுதியில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு சொந்தமாக பங்களா உள்ளது. இந்த ரிசார்ட்டுக்கு செல்வதற்காக அரசு இடத்தை ஆக்கிரமித்து சிமெண்ட் சாலை போட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த பணிகளுக்காக இரு கனரக வாகனங்கள் வந்துள்ளதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள். இரு சக்கர வாகனங்களுக்கே அனுமதி அளிக்கப்படாத போது இரு கனரக வாகனங்களுக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது.
அரசுக்கு சொந்தமான இடத்தில் பிரகாஷ் ராஜ் எப்படி சிமெண்ட் சாலையை அமைக்க முடியும், இதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள் ன கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி எழுப்பினர். விவசாய பணிகளுக்காக ஜேசிபி வாகனங்களை பயன்படுத்த அனுமதி இல்லை.
ஆனால் பிரகாஷ் ராஜின் நிலத்தில் 25 நாட்களாக இரண்டு கனரக வாகனங்கள் இயங்குவதற்கு எப்படி அனுமதி வழங்கினார்கள். அரசு இடத்தில் பாதையை அமைத்து விட்டு அதை பொது மக்கள் பயன்படுத்தக் கூடாது என பிரகாஷ்ராஜ் போர்டு வைத்துள்ளதாகவும் மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்த போர்டு அகற்றப்பட்டதாகவும் அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் சதுப்பு நிலத்தில் அதாவது நன்செய் நிலத்தில் 7 ஏக்கர் பரப்பளவு பிரகாஷ் ராஜ் பெயரில் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஒரு வேளை இந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் அது விரைவில் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் தலைமை கணக்கு தணிக்கை குழு விரைவில் ஆய்வு செய்யும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரகாஷ் ராஜின் பங்களாவிற்கு வணிக பயன்பாட்டுக்கான மின்சார அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அது போல் நடிகர் பாபி சிம்ஹா பங்களாவை ஒட்டி இருக்கும் 2 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் அதிகாரிகள் தலையிட்டு அரசு இடங்களை மீட்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மின் பொறியாளர் கூறுகையில் பிரகாஷ் ராஜ் பங்களாவுக்கு தற்காலிக மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. மின் வாரிய விதிகளின்படி தற்காலிக இணைப்புக்கு பஞ்சாயத்து வரி ரசீது இருந்தால் போதும். கட்டட அனுமதி தேவையில்லை. கட்டுமான பணி முடிந்ததும் மீண்டும் மின்வாரியத்தை அணுகினால் நிரந்தர மின் இணைப்பு வழங்கப்படும். இதில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications