தமிழ்நாட்டில் புதிதாக உருவாகும் 7 மாவட்டங்கள்? எடுக்கப்படும் மேஜர் முடிவு? என்னென்ன மாவட்டம் வரும்!
சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 7 மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
1 நவம்பர் 1956 அன்று மாநிலம் உருவாக்கப்பட்டபோது 13 மாவட்டங்கள் தமிழ்நாட்டில் இருந்தது. அதன்பின் நடந்த பல பிரிவுகளுக்குப் பிறகு தற்போது தமிழ்நாடு 38 மாவட்டங்களைக் கொண்டுள்ளது. மாவட்டங்கள் மேலும் தாலுகாக்களாகவும் சிறிய நிர்வாக வட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

அதே சமயம் சுதந்திரத்தின் போது, இந்தியாவில் மெட்ராஸ் பிரசிடென்சி 26 மாவட்டங்களைக் கொண்டதாக இருந்தது, அதில் 10 மாவட்டங்கள் இன்றைய தமிழ்நாட்டில் இப்போதும் மாவட்டங்களாக உள்ளன, அதாவது செங்கல்பட்டு, கோயம்புத்தூர், நீலகிரி, சென்னை, மதுரை, ராமநாதபுரம், சேலம்,, தஞ்சை, திருநெல்வேலி, திருச்சி ஆகியவை இப்போதும் மாவட்டங்களாக உள்ளன.
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் புதிதாக 7 மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய மாவட்டங்கள் உதயமாவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறதாம்.
தமிழ்நாட்டில் புதிதாக 7 மாவட்டங்கள் உதயமாவது தொடர்பாக விரைவில் முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியாகும் என்கிறார்கள்.
கும்பகோணம்
பொள்ளாச்சி
கோவில்பட்டி
பழனி
ஆரணி
விருத்தாச்சலம்
கோபிச்செட்டிபாளையம் ஆகிய மாவட்டங்கள் புதியதாக உதயமாகவுள்ளது. இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் அறிவிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மாவட்டங்கள் பிரிப்பு: இதற்கு முன் 2 அக்டோபர் 1966 இல், தர்மபுரி மாவட்டம், தர்மபுரி, ஹரூர், ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி தாலுக்காக்களை உள்ளடக்கிய பழைய சேலம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.
14 ஜனவரி 1974 இல், குளத்தூர், திருமயம், ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி தாலுக்காக்களை உள்ளடக்கிய திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் பகுதிகளிலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
31 ஆகஸ்ட் 1979 இல், ஈரோடு மாவட்டம் பவானி, ஈரோடு மற்றும் சத்தியமங்கலம் தாலுகாக்களை உள்ளடக்கிய பழைய கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.
8 மார்ச் 1985 அன்று, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் முந்தைய இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மூன்றாகப் பிரிக்கப்பட்டு சிவகங்கை மாவட்டத்தை உள்ளடக்கிய திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை மற்றும் இளையங்குடி தாலுகாக்கள் கொண்டதாக உருவாக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லி, வில்லிசுப்புத் தாலுகாக்கள், திருவில்லி, அரும்புத்தூர், திரு. சாத்தூர் மற்றும் ராஜபாளையம் தாலுகாக்கள் கொண்டதாக உருவாக்கப்பட்டது.
15 செப்டம்பர் 1985 இல், திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல், பழனி மற்றும் கொடைக்கானல் தாலுக்காக்களை உள்ளடக்கிய பழைய மதுரை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. 20 அக்டோபர் 1986 இல், தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் மற்றும் திருவைகுண்டம் தாலுகாக்களை உள்ளடக்கிய பழைய திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது
இதேபோல் சமீபத்தில் 30 நவம்பர் 2019 அன்று, திருக்கழுகுன்றம், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யாறு, திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம் மற்றும் வண்டலூர் தாலுகாக்களை உள்ளடக்கிய முந்தைய காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டது.. 24 மார்ச் 2020 அன்று, மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் தாலுகாக்களை உள்ளடக்கிய முந்தைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications