"அண்ணனை செஞ்சவனை போட வந்திட்டோம்டா.." டிக்டாக் வெளியிட்ட ரவுடிகளை தூக்கி உள்ளே போட்ட போலீஸ்!
போலீசுக்கு மிரட்டல் விடுத்த ரவுடிகள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்
Recommended Video
சென்னை: "வந்திட்டோம்டா.. வந்திட்டோம்டா... எங்க ஆனந்த் அண்ணனை செஞ்சவனை போட வந்திட்டோம்டா.." என்று பாட்டிலேயே போலீசாருக்கு மிரட்டல் விடுத்த ரவுடிகள் இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள்.
போன வருஷம் ஜூலை 2-ந்தேதி ராத்திரி சென்னை ராயப்பேட்டை தர்கா அருகே ஒரு கும்பல் குடிபோதையில் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தது. இந்த கும்பலுக்கு தலைவன் ஆனந்தன் என்பவன்.
அந்த சமயத்தில் ரோந்துக்கு வந்த தலைமைக் காவலர் ராஜவேல், அவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தார். ஆனால் அந்த கும்பலோ, போதைவெறியில் ராஜவேல் மீது தாக்குதல் நடத்தியது. இதில் ராஜவேலு படுகாயமடைந்து, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

என்கவுண்டர்
இதையடுத்து அந்த ரவுடிகள் ஜிந்தா, வேல்முருகன், அஜித்குமார், சீனு, மகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் ஆனந்தன் எஸ்.ஆகிவிட்டார். ஜூலை 4-ந்தேதி ஆனந்தனை போலீசார் பிடிக்க முயன்றனர். ஆனால், போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதால், ஆனந்தன் என்கவுன்டர் செய்யப்பட்டார்.

சுடுகாடு
இந்நிலையில், கடந்த 4-ந்தேதி ஆனந்தனின் முதலாமாண்டு நினைவுநாளை சக நண்பர்கள், ஆதரவாளர்கள் அனுசரித்தனர். இதற்காக ஆனந்தனை புதைத்த சுடுகாட்டின் பின்னணியில் ஒரு கானா பாட்டையும் பாடினார்கள்.

மிரட்டல்
அதில், " வந்திட்டோம்டா.. வந்திட்டோம்டா... எங்க ஆனந்த் அண்ணனை செஞ்சவனை போட வந்திட்டோம்டா.." என்ற வரிகள், மற்றும் ஆனந்தனை புகழ்ந்தும் வரிகள் இருந்தன. கானா பாட்டிலேயே போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்த இவர்கள், இந்த வீடியோவை இணையத்திலும் போட்டுவிட்டனர்.

கைது
வீடியோ வைரலானதையடுத்து, ராயப்பேட்டை போலீசாருக்கும் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, பாட்டாலேயே கொலை மிரட்டல் விடுத்த, சுரேஷ்குமார், விஜய், கார்த்திக், பிரசாத், கானா பாடகர் மணிகண்டன், சமீர் பாட்ஷா ஆகிய 7 பேரை ராயப்பேட்டை போலீஸார் கைது செய்து ஜெயிலுக்கு அனுப்பி வைத்து விட்டனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications