வரலாற்றிலேயே முதல்முறை.. 7 பெண்களை வைத்து.. பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஆட்டம் காட்டிய இந்தியா.. மாஸ்
சென்னை: இந்திய வரலாற்றில் முதல்முறையாக எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) பணியாற்றும் பெண்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவ படைகள் தடுத்து நிறுத்தப்பட்டு, தரமான பதிலடியும் கொடுக்கப்பட்டு உள்ளது.
உதவி கமாண்டன்ட் நேஹா பண்டாரி தலைமையிலான எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) பெண் பணியாளர்களின் இளம் குழு இதை மேற்கொண்டு உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ஜம்மு-காஷ்மீரின் அக்னூர் பகுதியில் உள்ள நிலைகளை இந்த குழுதான் பாதுகாத்தது. மூன்று பகல் மற்றும் மூன்று இரவுகளில் இவர்கள் அங்கே தீவிரமாக துப்பாக்கி சூடுகளை நடத்தி எல்லையை பாதுகாத்தனர்.
விடாமல் நடந்த மோதல்களில், அவர்கள் சியால்கோட்டில் உள்ள பாகிஸ்தான் நிலைகள் மீது தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடு நடத்தி அதிரடி பதிலடி கொடுத்தனர். போர் சமயத்தில் சியால்கோட்டில் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதை கேட்டு இருப்பீர்கள்.. அதற்கு பின் இருக்கும் ரியல் ஹீரோக்கள் இவர்கள்தான்.. இவர்களின் தாக்குதல்களால்தான் பாகிஸ்தான் நாட்டு படைகள் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
நேஹா பண்டாரி: ரியல் ஹீரோ
இந்திய ராணுவ சேவையில் சேர்ந்து மூன்று வருடங்களே ஆன நிலையில், நேஹா பண்டாரி இந்திய ராணுவத்தில் அசாத்திய வளர்ச்சியை பெற்றுள்ளார். இந்தியா பாகிஸ்தான் போரில் எல்லையில் பிஎஸ்எப் படைக்கு தலைமை தாங்கிய முதல் பெண் அதிகாரி ஆகி உள்ளார். இந்த வாய்ப்பை அவர் தைரியத்துடனும் தெளிவுடனும் பயன்படுத்திக் கொண்டு எல்லையை முறையாக பாதுகாத்தாக இந்திய ராணுவப்படை தெரிவித்துள்ளது.

எல்லையில் ஒரு நொடி கூட பின்வாங்காமல்.. ஒரு நொடி கூட ஓய்வு எடுக்காமல் 7 பெண் அதிகாரிகள் கொண்ட படையை வைத்து பாகிஸ்தான் ராணுவத்திற்கே ஆட்டம் காட்டி உள்ளார். மேலே விமானப்படை மோதல், எப்போது வேண்டுமானாலும் ஏவுகணைகள் தாக்கலாம் என்ற கடுமையான சூழலுக்கு இடையே துணிச்சலாக நின்று இவர் எல்லையை காத்து உள்ளார். அங்கே 7 பெண்களின் பிஎஸ்எப் படைகளை வழி நடத்தியது மட்டுமன்றி.. அங்கே ராணுவ துருப்புகள், எல்லையில் ஆயுதங்கள் எப்படி கொண்டு செல்லப்பட வேண்டும், எங்கே பாதுகாப்பு உள்ளது, எங்கே சிக்கல் உள்ளது என்பது போன்ற தகவல்களையும் உடனுக்குடன் இந்திய ராணுவத்திற்கு வழங்கி இருக்கிறார்.
நேஹாவின் கீழ் வந்த குழுவில் ஆறு பெண்கள் இருந்த நிலையில்.. மொத்தமாக இந்த 7 பெண்களும் சேர்ந்து பாகிஸ்தான் ராணுவதையே முடக்கி உள்ளனர்.
அவர்களில் நான்கு பேர் 2023 இல் இருந்து சமீபத்தில் சேர்க்கப்பட்டவர்கள். 17 ஆண்டுகளுக்கும் மேலான சேவையைக் கொண்ட இரண்டு வீராங்கனைகள் உள்ளனர். பஞ்சாபின் மஞ்சித் கோர் மற்றும் மல்கித் கோர் ஆகியோர் இந்த டீமில் உள்ள அனுபவம் வாய்ந்த வீராங்கனைகள் ஆவர். ஸ்வப்னா ரத், ஷம்பா பாசக், சுமி செஸ் மற்றும் ஜோதி பனியன் போன்ற புதியவர்களும் அச்சமின்றி எல்லையை பாதுகாத்து உள்ளனர்.
சரியான பெயர்
இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்று பெயர் வைக்கப்பட்டது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய பெண்களின் சிந்தூர்.. அதாவது குங்குமத்தை அழிக்க வந்தனர். அதற்கு பதிலடியாக இந்த பெயர் வைக்கப்பட்டது. அதோடு போர் சமயங்களில் சிந்தூர் வைப்பது.. அதாவது திலகம் இடுவது வீரத்தின் அடையாளம்.
இந்த இரண்டு அர்த்தங்களுக்கும் சான்றாக நம் நாட்டு பெண் வீரர்கள் எல்லையை காத்ததோடு மட்டுமன்றி.. பாகிஸ்தான் ராணுவத்திற்கு தண்ணீர் காட்டி உள்ளனர்!












Click it and Unblock the Notifications