ஜோதி தலையில் 6 முறை சுத்தியால் அடித்த குடிகார ராமகிருஷ்ணன்.. சென்னையில் கொடுமை!
Recommended Video
சென்னை: குடிகார ராமகிருஷ்ணன் மனைவியை சுத்தியாலேயே அடித்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை புளியந்தோப்பு கார்ப்பரேஷன் லைன் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். 70 வயதாகிறது. கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜோதி, வயது 60! இவர்களுக்கு 6 பிள்ளைகள் இருக்கிறார்கள்.

கூலி வேலை செய்துவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது, தண்ணி அடித்துவிட்டு வருவதுதான் ராமகிருஷ்ணனின் வழக்கம். அப்படித்தான் கடந்த 6-ம் தேதி வீட்டிற்கு வந்த ராமகிருஷ்ணன் குடிபோதையில் இருந்தள்ளார்.
அப்போது, குடியிருக்கும் வீட்டை விற்று பணத்தை தரும்படி ஜோதியிடம் தகராறு செய்துள்ளார். இதற்கு ஜோதி மறுப்பு சொன்னார். ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன், பக்கத்தில் கிடந்த சுத்தியை எடுத்து ஜோதியின் தலையில் ஆறு தடவை ஓங்கி அடித்துள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த ஜோதி ரத்த வெள்ளத்தில் விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது சம்பந்தமாக புளியந்தோப்பு போலீசார் மறுநாளே ராமகிருஷ்ணனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இவ்வளவு நாள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜோதி, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கொலை முயற்சி வழக்கில் கம்பி எண்ணும் ராமகிருஷ்ணன் மேல், இப்போது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications