• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"உறவு"க்கு பாட்டி ஒத்துக்கல.. ராத்திரியில் அலறல் வேற.. அதான்.. அதிர வைத்த கொலைகாரன்!

|

சென்னை: உடலுறவுக்கு பாட்டி மறுத்துவிட்டார்.. அதனால் பலவந்தமாக அவரை பலாத்காரம் செய்தேன்.. என் பிடியில் இருந்து அவர் தப்பி ஓட முயன்றார்.. அந்த டென்ஷனில்தான் அவரை கொன்றேன் என்று பாட்டியை சீரழித்து கொன்ற இளைஞர் வாக்குமூலம் தந்துள்ளார்.

  சென்னை: ஆசைக்கு இணங்க மறுத்த 80 வயது மூதாட்டி… தலையில் கல்லை போட்டு கொலை.. இளைஞர் கைது!

  திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி.. இவர்தான்அந்த பாட்டி.. 72 வயசாகிறது.. கடந்த 12-ம்தேதி நடுராத்திரி திருவொற்றியூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் திடீரென அலறினார்..

  அந்த சத்தம் கேட்டு, அங்கிருந்தோர் ஓடிச் சென்று பார்த்தனர்.. அப்போது பாட்டிக்கு தலையில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. வலி பொறுக்க முடியாமல் கத்தவும், ஆஸ்பத்திரி ஊழியர்கள் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை தந்தனர்.. அப்போதுதான் அவரது உடலில் பல இடங்களில் ரத்த காயங்கள் இருந்தது.. பாட்டியின் உடல்நிலையும் ஆபத்தாக இருந்தது..

   சிசிடிவி

  சிசிடிவி

  எனவே ஆஸ்பத்திரி தரப்பு போலீசாருக்கு தகவல் தரவும், அவர்கள் விரைந்து வந்து பாட்டியை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்... பின்னர், ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்... அப்போதுதான் சம்பவம் ஓரளவு யூகிக்கப்பட்டது. பாட்டிக்கு நைட் நேரம் தூக்கம் வரவில்லை.. அதனால் ஒரு டீ குடிப்பதற்காகவே வெளியே வந்திருக்கிறார்..

  பாறாங்கல்

  பாறாங்கல்

  அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒரு இளைஞர் பாட்டியை பார்த்துவிட்டு, நைசாக பேசி, ஆஸ்பத்திரிக்குள் அழைத்து வந்து, கடைசியில் பலாத்காரமே செய்துள்ளார். இதை எதிர்பார்க்காத பாட்டி, கத்தி கூச்சலிடவும், அந்த இளைஞர் பயந்துபோய், கீழே கிடந்த கல்லை எடுத்து, பாட்டி தலையில் கல்லை போட்டுவிட்டு, தப்பி இருந்தது தெரியவந்துள்ளது.. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய இளைஞரை தேடினர். இதனிடையே, பாட்டி சீரியஸாக இருந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார்.

  அடையாளம்

  அடையாளம்

  இதை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், தலைமறைவான இளைஞரை தேடி வந்தனர்.. ஆனால், சிசிடிவி கேமராவில் அவர் முகம் சரியாக பதியவில்லை.. அதனால் அவரை அடையாளம் கண்டுபிடித்து தேடுவதில் திருவொற்றியூர் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது.. மிக தீவிரமான தேடுதல் வேட்டை ஆரம்பமானது..

  தேடுதல்

  தேடுதல்

  அப்போதும் குற்றவாளியை பற்றி எந்த க்ளூவும் கிடைக்கவில்லை.. அதனால் குற்றப்பிரிவு ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, அதன்பிறகு தேடுதல் விரிவடைந்தது. அதனடிப்படையில் வேறு வேறு பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா ஆய்வு செய்தபோதுதான், அதே இளைஞர், கொலை நடந்த அன்று இரவு, வேக வேகமாக நடந்து செல்வதும், பிறகு ஒரு கண்டெய்னர் லாரியில் ஏறி செல்வதும் தெரியவந்தது.

  அதிரடி

  அதிரடி

  இந்த ஒரு க்ளூவை வைத்துதான் போலீசார் அதிரடியில் இறங்கினர்.. தனிப்படை எண்ணூர் விரைந்தது.. இறுதியில் சம்பந்தப்பட்ட இளைஞரை சுற்றி வளைத்தும் பிடித்துவிட்டது. அவர் பெயர் ஜெயக்குமார்.. சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவராம்.. சம்பவத்தன்று ஆஸ்பத்திரி பக்கத்தில் இருந்த ஒரு டாஸ்மாக்கில் தண்ணி அடித்துள்ளார்.. ஃபுல் போதையில் டாஸ்மாக்கில் இருந்து வெளியே வந்தபோதுதான், பாட்டியை ரோட்டில் பார்த்துள்ளார்..

  அலறல்

  அலறல்

  எங்கே போவதாக இளைஞர் அவரை கேட்கவும் டீ சாப்பிட போவதாக பாட்டி கூறியுள்ளார்.. அதன்பிறகுதான் ஆஸ்பத்திரி வளாகத்திற்கு பேசிக் கொண்டே அழைத்து வந்தாராம்.. அங்கே உடலுறவுக்கு பாட்டியை அழைத்திருக்கிறார்.. ஆனால், பாட்டி மறுத்துவிட்டாராம்.. அதனால், வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார்.. இதனால், அந்த பாட்டி, அங்கிருந்து அலறிகொண்டே எழுந்து தப்பி ஓட முயன்றுள்ளார்..

  டென்ஷன்

  டென்ஷன்

  அதை பார்த்ததும் தான் டென்ஷன் ஆகிவிட்டதாகவும், ஆத்திரமடைந்து அருகிலிருந்த கட்டையை எடுத்து அவரை பலமாக தாக்கியதாகவும் ஜெயக்குமார் வாக்குமூலம் தந்துள்ளார். பாட்டி உயிரோடு இருந்தால், தான் எப்படியும் மாட்டிக் கொண்டு விடுவோம் என்ற பயத்தில்தான், கல்லையும், கட்டையையும் கொண்டு கொன்றதாகவும் ஜெயக்குமார் போலீசில் தெரிவித்துள்ளார்.. இன்னும் விசாரணை நடந்து வருகிறது.

   
   
   
  English summary
  72 year old woman raped and man arrested in Chennai
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X