தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா பரவல்.. இன்று 741 பேருக்கு பாதிப்பு.. 13 பேர் பலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 741 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 8536 பேர் தமிழ்நாட்டில் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக முன்பு மருத்துவர் வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் தமிழ்நாட்டில் தெரியவில்லை.

மாறாக தமிழ்நாட்டில் தினசரி கொரோனா கேஸ்கள் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் தினமும் 800க்கும் குறைவாகவே கேஸ்கள் பதிவாகி வருகின்றன.

எத்தனை

எத்தனை

2721762 பேர் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா காரணமாக தமிழ்நாட்டில் இன்று 13 பேர் பலியாகி உள்ளனர். 36401 பேர் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

கொரோனா

கொரோனா

அதோடு தினசரி டிஸ்சார்ஜ் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை புதிய கேஸ்களை விட தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது. இதனால் ஆக்டிவ் கேஸ்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 808 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2676825 பேர் தமிழ்நாட்டில் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

ஆண்கள் பெண்கள்

ஆண்கள் பெண்கள்

100817 மாதிரிகள் இன்று தமிழ்நாட்டில் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டது . 53560440 மாதிரிகள் தமிழ்நாட்டில் இதுவரை மொத்தமாக கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 1588569 ஆண்கள் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 1133155 பெண்கள் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர் தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக இதுவரை பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை

சென்னை

சென்னையில் 114 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 1274 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். சென்னையில் இன்று 3 பேர் பலியாகி உள்ளனர். கோவையில் 119 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவையில் இன்று 3 பேர் பலியாகி உள்ளனர். கோவையில் 1258 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். ஈரோட்டில் 78 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் 830 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 659 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+