பாலை வார்த்த ஸ்டாலின்.. தொற்றால் பெற்றோரை இழந்த 75 பிஞ்சுகள்.. திருச்சியில்.. விரைவில் டெபாசிட்..!
திருச்சியில் பெற்றோரை இழந்த 75 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்
சென்னை: கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து 75 குழந்தைகள் தவித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.. திருச்சி மாவட்டத்தில் மட்டும் 75 குழந்தைகளா? என்ற ஆச்சரியமும், வேதனையும் சூழ்ந்துள்ளது..! அதேசமயம் இவர்களுக்கான உதவியை செய்வதில் மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது.
கொரோனா பல பேரை கொன்றெடுத்துவிட்டது.. இதில் முதல் அலையைவிட இரண்டாவது அலையில்தான் அதிக அளவு இறப்புகளை சந்திக்க நேரிட்டது.
எனவேதான், கொரோனாவால் பெற்றோரை இழந்து பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை கூட விடுபட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு துறைகள் சார்பில் விவரங்கள் சேகரிக்கப்பட்டும் வருகிறது.

அறிவுரை
இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டும் முன்னெடுத்தது.. பெற்றோரை இழந்த குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களின் நலனை காக்கவும் பல்வேறு நடவடிக்கையை எடுக்கும்படியும் கேட்டுக் கொண்டிருந்தது.

முக ஸ்டாலின்
இந்நிலையில், தமிழ்நாட்டிலும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.. அதன்படி, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பெற்றோரை இழந்த 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் எதிர்கால வாழ்வுக்காக சிறப்பு திட்டத்தின்படி, கொரோனாவுக்கு தாய்-தந்தை இருவரையும் இழந்து நிராயுதபாணியாக நிற்கும் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சமும், இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சமும் அவர்களின் பெயர்களில் டெபாசிட் செய்யப்பட உள்ளது.

குழந்தைகள்
இந்த சிறப்பு புனர்வாழ்வு நிதிக்கு தகுதியான குழந்தைகளின் விவரங்களை சேகரிக்கும் பணி அரசின் துறைகள் சார்பில் திருச்சி மாவட்டத்தில் நடந்து வருகிறது.. அப்போதுதான் 75 குழந்தைகள் தொற்றால் பெற்றோரை இழந்தும் தவித்தும் வருவது கண்டறியப்பட்டுள்ளது... அவர்களில் 3 குழந்தைகள் அப்பா, அம்மா 2 பேரையுமே இழந்துவிட்டனராம். மீதமுள்ள 72 குழந்தைகள் இருவரில் ஒருவரை இழந்து தவித்து வருவது தெரியவந்துள்ளது.

விவரங்கள்
இதை பற்றி கலெக்டர் சிவராசு சொல்லும்போது, "கொரோனாவால் பெற்றோரை இழந்து பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை கூட விடுபட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு துறைகள் சார்பில் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 75 குழந்தைகளின் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது... புனர்வாழ்வு நிதிபெற கொரோனாவால் இறந்ததற்கான ஆஸ்பத்திரி சான்றிதழ், இறப்பு சான்றிதழ், ஆர்டிபிசிஆர் டெஸ்ட் முடிவுக்கான ஆவணம் போன்றவை இருக்க வேண்டும்" என்றார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications