750 எலக்ட்ரிக் பஸ்கள்... சென்னையில் மின்சார பேருந்துகள் மூலம் மெகா மாற்றம்.. 12 பணிமனைகள் தீவிரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கும் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தை ஒட்டுமொத்தமாக நவீனமயமாக்கும் நோக்கில், ஒரு மாபெரும் மின்சாரப் பேருந்து புரட்சிக்குத் தமிழக அரசு தற்பொழுது அஸ்திவாரம் அமைத்துள்ளது. உலக வங்கியின் நிதி உதவியுடன், சுமார் 1,337.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 750 புதிய அதிநவீன மின்சாரப் பேருந்துகளைச் சென்னை சாலைகளில் இறக்குவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் மிகத் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.

சென்னையில் நாளுக்கு நாள் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.. இதனை சமாளிக்கவே முடியவில்லை.. அதேபோல எரிபொருள் செலவும் விண்ணை தொட்டு வருகிறது.. இப்போதைக்கு விலை இறங்குவது போல தெரியவில்லை.. அதேபோல அபாயகரமான காற்று மாசுபாடு அதிகரித்தபடி உள்ளது..

Electric Buses Chennai 750 New Electric Buses Public Transport 750

750 புதிய அதிநவீன மின்சாரப் பேருந்துகள்

மேற்கண்ட இந்த 3 முக்கியப் பிரச்சனைகளுக்கும் ஒரே நேரத்தில் முற்றுப்புள்ளி வைக்கவே அரசு முடிவு செய்துள்ளது.. இதற்காகவே தமிழக தலைநகரின் பொதுப்போக்குவரத்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கான ஒரு பிரம்மாண்ட உள்கட்டமைப்பு மாற்றம் இப்போது சென்னையின் முக்கியப் பகுதிகளில் வேகமாக அரங்கேறி வருகிறது.

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ மின்வாகனக் கொள்கையின்படி, வரும் 2030-ம் ஆண்டிற்குள் அரசு போக்குவரத்துக் கழகங்களின் ஒட்டுமொத்தப் பேருந்துகளில் 30 சதவீதத்தை முழுமையாக மின்சார வாகனங்களாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெருங்கனவின் தொடக்கமாக, சென்னையில் முதற்கட்டமாக 500 குளிரூட்டப்பட்ட ஏசி மின்சாரப் பேருந்துகளும், 250 ஏசி இல்லாத தாழ்தள மின்சாரப் பேருந்துகளும் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

சென்னையில் எலக்ட்ரிக் பஸ்கள்

இந்த 750 புதிய மின்சாரப் பேருந்துகளை இயக்குவது சாதாரண விஷயமல்ல என்பதால், அதற்கான பிரம்மாண்ட உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வசதிகளை உருவாக்குவதற்கென்றே தனியாக 289.69 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் சென்னை முழுவதும் பரவலாக நடைபெற்று வருகின்றன.

மின்சார பேருந்துகளை தடையின்றி இயக்குவதற்காக, அதிவேக சார்ஜிங் வசதி கொண்ட பிரத்யேக மையங்களை அமைக்கும் பணிகளில் அதிகாரிகள் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார்களாம்.. சென்னை சென்ட்ரல் டிப்போ-2 உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பகுதிகளில் நடைபெற்று வரும் இந்த கட்டுமானப் பணிகளை மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் பிரபு சங்கர் நேற்றுகூட நேரிலேயே சென்று பார்வையிட்டு, அதன் முன்னேற்றங்களை ஆய்வு செய்திருக்கிறார்.

உள்கட்டமைப்பு பணிகள்

இந்த பிரம்மாண்ட திட்டத்திற்காக சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள 12 முக்கியப் பணிமனைகள் இப்போது மின்சார பேருந்துகளுக்குப் பொருத்தமான உள்கட்டமைப்புகளுடன் முழுமையாகத் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக வியாசர்பாடி, பெருங்குடி, பூந்தமல்லி, தண்டையார்பேட்டை மற்றும் மத்திய பணிமனைகள் மின்சாரப் பேருந்து சேவைக்கேற்ப இப்போது அதிநவீன வசதிகளுடன் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, சென்னையின் பிற முக்கியப் பகுதிகளான ஆலந்தூர், மத்திய பணிமனை-2, ஆவடி, பாடியநல்லூர், பெரம்பூர், அய்யப்பன்தாங்கல் மற்றும் கே.கே.நகர் ஆகிய பணிமனைகளையும் எலக்ட்ரிக் பஸ்களை இயக்கும் வகையிலான அதிநவீன கட்டமைப்புகளுடன் மாற்றும் அதிரடி நடவடிக்கைகள் தற்பொழுது முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போக்குவரத்து துறை அதிகாரிகள் இலக்கு

திட்டமிட்டபடி இந்த 750 மின்சார பஸ்களும் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாகவே, இந்த 12 பணிமனைகளின் அனைத்துக் கட்டுமான பணிகளையும் முழுமையாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இலக்கு வைத்துள்ளார்களாம்.

அதுமட்டுமல்லாமல், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, மெட்ரோ நிலையங்களுடன் இணைப்பை மேம்படுத்தும் வகையில் பிரத்யேகமான சிறிய ரக மின்சாரப் பேருந்துகளையும் மிக விரைவில் அறிமுகப்படுத்த மாநகரப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இந்த 750 பேருந்துகளும், சிறிய ரக மின்சாரப் பேருந்துகளும் முழுமையாகச் சேவையில் இணைந்த பிறகு, சென்னையின் பொதுப்போக்குவரத்து அமைப்பு சர்வதேசத் தரத்திற்கு வலுவடைவதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் இது ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக மாறும் என்று நம்பப்படுகிறது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+