மெட்ரோ ரயில் நிலையத்தில் கலை நிகழ்ச்சிகள்...களைகட்டும் 75-வது ஆண்டு சுதந்திர தினம்!
சென்னை : 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற கிராமிய கலை நிகழ்ச்சிகள். பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்தியாவின் 75வது சுதந்திர தினம், நாடு முழுவதும் நாளை உற்சாகமாகக் கொண்டாடவுள்ளது. இந்த மகத்தான தினத்தை, முன் எப்போதும் இல்லாத வகையில் வெகு விமர்சையாக கொண்டாட மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

பிரதமர் மோடி, அனைத்து வீடுகளிலும் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனையடுத்து அனைத்து வீடு மற்றும் அலுவலகங்களில் இடங்களில் நேற்று முதல், தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, சென்னை விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 75-வது சுதந்திர தின கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டது. தமிழ்நாடு கிராமிய கலைகள் வளர்ச்சி மையத்துடன் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்பாடு செய்தது. 4 நாள்கள், மெட்ரோ ரயில் நிலையங்களில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கிராமிய காலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி, சென்னை விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மெட்ரோ நிர்வாகத்தின் சார்பாக, அமுதம் பெருவிழா என்ற தலைப்பில், பாரம்பரியத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாகவும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேளதாளங்கள் முழங்க நாதஸ்வர இசையுடன் கூடிய கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், பறை உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு மதுரை கிராமிய கலை வளர்ச்சி மையத்தின் சார்பாக கலைஞர்கள் இதில் கலந்துகொண்டு பாரம்பரிய கலைகளை அரங்கேற்றினார். நாட்டுப்புறக் கலைஞர்களின் இந்த பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை, ஏராளமான பொதுமக்கள் உற்சாகமாக கண்டு களித்தனர்.
Recommended Video
ஞாயிற்றுக்கிழமையான இன்று, கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்திலும், நாளை, அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையத்திலும் கிராமிய கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், கிராமிய கலைகளும் பிரபலமாகும், சுதந்திர தினத்தை கொண்டாடவும் செய்துவிடலாம். அதேபோல, வருமானம் குறைவாக வரும் மெட்ரோவுக்கு இதன் மூலம் கூடுதல் விளம்பரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications