சோளம் வித்த காசு ரூ.77 லட்சம்? அரியலூர் ரயிலில் 500 ரூபாய் நோட்டுகளுடன் சிக்கிய இளைஞர்! ஹவாலா பணமா?
சென்னை: அரியலூர் ரயில் நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூபாய் 77 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோளம் விற்ற பணத்தை கொண்டு வருவதாக அவர் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். வருமான வரித்துறையினர் இந்தப் பணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (மார்ச் 1) அதிகாலை 1.30 மணிக்கு அரியலூர் வந்தடைந்தது. அதிலிருந்து பயணிகள் இறங்கிச் சென்ற நிலையில், ரயில் மூலம் போதைப் பொருட்கள் கடத்தப்படுகிறதா என ரயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து அரியலூரில் இறங்கிய பயணி ஒருவர், துணிக்கடைகளில் வழங்கப்படும் கட்டைப்பையுடன் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுள்ளார். அவரிடம் அரியலூர் ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அவரது பையை வாங்கி சோதனை செய்ததில் அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரிடம் இருந்து ரூபாய் 77 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக ரூபாய் 77 லட்சம் அளவுக்கு கைப்பற்றப்பட்டுள்ளன.
பிடிபட்ட பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூர் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த வினோத் குமார், சோளம் விற்ற பணத்தை எடுத்து வருவதாக போலீசார் நடத்திய விசாரணையில் கூறியுள்ளார். ஆனால், எந்த ஆவணமும் அவரிடம் இல்லை. இதையடுத்து, அரியலூர் ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
மேலும், வருமான வரித்துறைக்கும் தகவல் அளித்தனர். காலை அரியலூர் ரயில்வே காவல்நிலையம் வந்த வருமான வரித்துறை டிஎஸ்பி சுவேதா தலைமையிலான போலீஸார், வினோத்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் சரிவர பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் எடுத்து வந்தது ஹவாலா பணமா என வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications