மிக்ஜாம்: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 8,000 கன அடி நீர் திறப்பு-அடையாறு ஆற்றில் பெரும் வெள்ளம்!
சென்னை: மிக்ஜாம் புயல் கொட்டித் தீர்க்கும் பெருமழை வெள்ளத்தால் செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து வினாடிக்கு 12,000 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது வினாடிக்கு 8,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
சென்னைக்கு அருகே மையம் கொண்டிருக்கிறது மிக்ஜாம் புயல். மிக வலுவான மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடைவிடாத பெருமழை கொட்டித் தீர்க்கிறது. 1976-ம் ஆண்டுக்குப் பின்னர் 47 ஆண்டுகளில் இல்லாத பெருமழையை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் எதிர்கொண்டிருக்கின்றன.

இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து 12,000 கன அடியாக இருந்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி. தற்போது ஏரியின் நீர்மட்டம் 22 அடியை எட்டியதால் நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று காலை 3,000 கன அடி நீர் அடையாறு ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 6,000 கன அடிநீர் திறக்கப்பட்டது.
தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 8,000 கன அடிநீர் திறக்கப்படுகிறது. இதனால் அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
சென்னையில் அடையாறு ஆற்றின் கரையோ மக்களுக்கு கூடுதல் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. சென்னை பெருநகரம் முழுவதும் ஏற்கனவே பேய்மழை வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் அடையாறு ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால் ஏரியில் இருந்து 8,000 கன அடி நீருடன் கூடுதலாக நீர் திறக்கக் கூடும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர் வரத்து, நீர் திறப்பை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications