தமிழ்நாட்டில் மேலும் 8,183 பேருக்கு கொரோனா பாதிப்பு.. தினசரி உயிரிழப்பு குறைகிறது!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 8,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 180 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து 29-வது நாளாக குறைந்துள்ளது. தினசரி பாதிப்பில் கோவை தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.

சரியும் கொரோனா
கொரோனாவை தடுக்க தமிழ்நாட்டில் ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. தினசரி உயிரிழப்பும் கணிசமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8,183பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு எத்தனை?
இதனால் மொத்த பாதிப்பு 24,14,680 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 180 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு 31 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 31,015 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 18,232 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 23,04,885 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்

சென்னையில் குறைகிறது
78,780 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,65,102 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 3,01,90,838 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 468 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 2-வது நாளாக பாதிப்பு 500-க்கும் கீழே குறைந்து விட்டது. ஆனால் உயிரிழப்பில் சென்னைதான் முதலிடம் வகிக்கிறது. சென்னையை விட கோவையில் பாதிப்பு தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.

தஞ்சையில் குறைகிறது
கோவையில் மட்டும் 1014 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 334 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 128 பேருக்கும், மதுரையில் 145 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 150 பேருக்கும், திருவள்ளூரில் 207 பேருக்கும், திருச்சியில் 242 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 489 பேருக்கும், விருதுநகரில் 119 பேருக்கும், ஈரோட்டில் 933 பேருக்கும், சேலத்தில் 533 பேருக்கும், நாமக்கல்லில் 328 பேருக்கும், தஞ்சாவூரில் 361 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications