ஓபிஎஸ் வீசிய 8 வலைகள்.. பல்லை கடித்த எடப்பாடி! பதிலுக்கு வந்த 11 "பாயிண்ட்ஸ்".. இப்படி நடந்துடுச்சே!
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பின் வாதங்கள் முடிந்துள்ளன. ஓ பன்னீர்செல்வம் தரப்பின் வாதங்களும் கடந்த வாரமே நிறைவு பெற்றது. இந்த வழக்கில் ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் முக்கியமான சில வாதங்களை எடுத்து வைத்தனர்.
அதிமுக பொதுக்குழு வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்று நடக்கும் விசாரணை இந்த வழக்கில் கடைசி நாள் விசாரணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் வைத்தது.
இன்று வழக்கு விசாரணை தீர்ப்பிற்காக வழக்கு ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி கூடியது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டன. அதோடு இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டார். இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

ஓபிஎஸ் வழக்கு
இதில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைரமுத்துவின் வழக்கறிஞர் வாதம் வைத்தார். அவர் வைத்த வாதங்கள் பின்வருமாறு,
1. அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவிக்குத்தான் அனைத்து பவர்களும் இருந்தன. ஆனால் 2017ல் இந்த பதவி நீக்கப்பட்டது. செயற்குழு மற்றும் பொதுக்குழு மூலம் இந்த பதவி நீக்கப்பட்டது. அதன்பின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன
2. பொதுக்குழு கூடியதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். பொதுக்குழு தவறான வழியில் கூட்டப்பட்டு உள்ளது. விதிமுறைகளை பின்பற்றாமல் பொதுக்குழுவை கூட்டி உள்ளனர். ஆனால் இதை பற்றி உயர் நீதிமன்றம் கவனம் கொள்ளாமல் தீர்ப்பு வழங்கி உள்ளது.
3. அதிமுகவில் தலைமை கழகம் முடிவுகளை எடுக்க முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் மேற்கொள்ள முடியும். அப்படி இருக்கும் போது என்னுடைய அனுமதி இன்றி முடிவுகளை எடுத்துள்ளனர். இது எப்படி நியாயம் ஆகும்.

அங்கீகாரம்
4. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் என்பது பொதுச்செயலாளரின் பதவிக்கு இணையான அதிகாரம் கொண்ட பதவி ஆகும். இந்த பதவி என்பது தொண்டர்கள் மூலம் தேர்வு செய்யப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் மட்டுமே , பொதுச்செயலாளர் பதவிக்கு பின் நேரடியாக தொண்டர்கள் மூலம் தேர்வு செய்யப்படும் பதவிகள் ஆகும். இந்த பதவிகளுக்கு எடப்பாடி, ஓபிஎஸ் இருவரும் போட்டியின்றி தேர்வானார்கள். இதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. இந்த உட்கட்சி தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது.
5. அதிமுகவின் கட்சி விதி 42ன்படி உட்கட்சி முடிவுகளை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒன்றாக எடுக்க வேண்டும். அதாவது கட்சியில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் படிவத்தில் இரண்டு பேரும் ஒன்றாக கையெழுத்து போட வேண்டும். கட்சி நிதி சார்ந்த விவகாரங்களில் ஒன்றாக கையெழுத்து போட வேண்டும். கட்சி கணக்கு வழக்குகளில் ஒன்றாக கையெழுத்து போட வேண்டும். கட்சியில் இருந்து ஒருவரை நீக்க வேண்டும் என்றால் அதில் இவர்கள் ஒன்றாக கையெழுத்து போட வேண்டும். இருவரும் ஒருமித்த குரலில் செயல்பட வேண்டும்.

கட்சிக்கு உண்மையான தொண்டன்
6. நான் கட்சிக்கு உண்மையாக உழைத்தேன். தேவையான அனைத்தையும் செய்தேன். செய்வேன். ஆனால் என்னை சட்டத்தை மீறி நீக்கி உள்ளனர். இது தொண்டர்களுக்கு எதிரானது.
7. பொதுக்குழுவே தவறாக கூடி உள்ளது. அதனால் அதில் எடுக்கப்பட்ட முடிவுகளும் தவறு என்று கூற வேண்டும். அதேபோல் கட்சி ரீதியான விதிகளை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை.
8. ஒருங்கிணைப்பாளரை இவர்கள் கட்சியில் இருந்தே நீக்கி உள்ளனர். அந்த பதவிகளையும் நீக்கி உள்ளனர் என்று வைரமுத்து தரப்பு வாதம் வைத்தது. இதை கேட்ட நீதிபதிகள் இருவரும் ஒன்றாக செயல்பட வேண்டும் என்று விதி உள்ளதா.. அது என்ன விதி என்று கேட்டனர். அதற்கு வைரமுத்து தரப்பு, அதிமுகவின் கட்சி விதி 42 அது என்று கூறினார். இதையடுத்து ஓ இந்த 42 விதியில் இருவரும் ஒன்றாக ஒருமித்த குரலில் செயல்பட வேண்டும் என்று சொல்கிறதா? இந்த விதி சுவாரசியமாக இருக்கிறதே என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

எடப்பாடி வாதம்
இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வைத்த வாதத்தில்,
1. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் முடிந்துவிட்டது. அவர்களை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை.
2. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பளார் பொறுப்புகளை நீக்கும் வலிமை பொதுக்குழுவிற்கு இருப்பதாக அவர் வாதம் வைத்து இருக்கிறார். இந்த பொறுப்புகளை உருவாக்கியது பொதுக்குழு. அதனால் இந்த பதவிகளை நீக்குவதற்கும் பொதுக்குழுவிற்கு உரிமை உள்ளது. பொதுக்குழுவில் முடிவை ஏற்கும் நபரே கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்க முடியும். கட்சியின் விதி எண் 7 இதை கூறுகிறது. இந்த பொதுக்குழுவில்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் நீக்கப்பட்டனர்.
3. பொதுக்குழுவில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் எடப்பாடிக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர்.

பெரும்பான்மை
4. பெரும்பான்மை அடைப்படையில்தான் முடிவுகளை எடுக்க முடியும் என்று வாதம் வைத்தனர்.
5. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் செயற்குழுவால் தேர்வு செய்யப்பட்டதை பொதுக்குழு இன்னும் அங்கீகரிக்கவில்லை. பொதுக்குழுவிற்கே உச்சபட்ச அதிகாரம் இருக்கிறது. செயற்குழுவால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களுக்கு பொதுக்குழு ஒப்புதல் தேவை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு அந்த ஒப்புதல் இல்லை. இரட்டை தலைமையில் ஏற்பட்ட குழப்பத்தால்தான் கட்சியில் மீண்டும் ஒற்றை தலைமை தேவை என்ற நிலை ஏற்பட்டது. கட்சியின் நலனை கருதி ஒற்றை தலைமை கொண்டு வருவது எப்படி தவறாகும். கட்சியின் நலனுக்கு தேவை என்றால் அதைதானே செய்ய வேண்டும்.
6. தலைமை கழக நிர்வாகிகள் பொதுக்குழுவை அவசர நேரத்தில் கூட்ட முடியும். அந்த அடிப்படையில்தான் பொதுக்குழுவை கூட்டி உள்ளனர்.

உட்சபட்ச அதிகாரம்
7.இடைக்கால பொதுச்செயலாளர் தவறு என்றால்.. ஒருங்கிணைப்பாளர்.. இணை ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டும் எப்படி சரியாகும். பொதுச்செயலாளர் என்ற பதவி மட்டும் இருப்பதே தானே சரியாக இருக்கும். அதனால் பொதுச்செயலாளர் பதவியை தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்க பொதுக்குழுவில் முடிவு செய்தோம்.
8. ஜூலை 11ம் தேதிக்கான பொதுக்குழு அறிவிப்பு ஜூன் 23ம் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. இது ஓ பன்னீர்செல்வத்திற்கும் தெரியும். அவர்தான் பொதுக்குழுவிற்கு வராமல் கட்சி விதிகளை மீறினார். பொதுக்குழுவில் விதிகளை பின்பற்றும் நபர்களே அடிப்படை உறுப்பினராக இருக்க முடியும் என்று கட்சி விதி கூறுகிறது. அதை ஓ பன்னீர்செல்வம் மீறியதால் அவர் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார், என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் வைத்துள்ளது.

உறுப்பினர்
9. கட்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் 1ல் மூன்று பங்கு உறுப்பினர்கள் எடப்பாடி பக்கம் இருக்கிறார்கள். அதனால் பொதுக்குழு செல்லும் என்று வாதம் வைத்தனர்.
10. பொதுக்குழுதான் தற்போது ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கி உள்ளது. பொதுக்குழுதான் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒப்புதல் அளிக்க முடியும். அதே பொதுக்குழுதான் அவரை நீக்கவும் முடியும். அப்படி இருக்கும் போது இதை மட்டும் ஓ பன்னீர்செல்வம் எப்படி எதிர்க்கலாம், என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் வைத்து உள்ளது.












Click it and Unblock the Notifications