பாஜக, இந்தியா கூட்டணி.. யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் போனால் என்ன நடக்கும்? 8 முக்கிய விஷயங்கள்
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் என்ன மாதிரியான சம்பவங்கள் மத்தியில் நடக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
2024 லோக்சபா தேர்தல் முடிவுகள் நெருங்கி வருகின்றன. தேர்தல் முடிந்த நிலையில் நாளை வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த நிலையில் லோக்சபா தேர்தல் தொடர்பான எக்சிட் போல் முடிவுகள் நேற்று முதல்நாள் வெளியாகின.

2024 லோக்சபா தேர்தலில் பாஜக பெரும்பாலும் 300+ இடங்களை வெல்லும் என்று தேர்தல் கணிப்புகள் சொல்கின்றன. சில கணிப்புகள் என்டிஏ கூட்டணிக்கு 370 இடங்கள் கூட கிடைக்கும் என்று கணித்து உள்ளன. 3 கணிப்புகளை தவிர மற்ற எல்லா கணிப்புகளும் பாஜக ஆட்சியை உறுதி செய்கின்றன. கணிப்புகள் உண்மையாகும் பட்சத்தில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமர் ஆக பதவி ஏற்பார்.
அதே சமயம் மத்தியில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் பின் வரும் வாய்ப்புகள் சம்பவங்கள் மத்தியில் நடக்கும். அதாவது எந்த கட்சியும், கூட்டணியும் 272 என்ற மேஜிக் நம்பரை எடுக்காமல் போனால் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
என்ன நடக்கும்? இங்கே குறிப்பிடப்பட்டு உள்ள 8 விஷயங்கள்தான் தேர்தல் முடிவு தொங்கு நாடாளுமன்றமாக மாறினால் நடக்க வாய்ப்பு உள்ளது.
1. யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத பட்சத்தில்.. எந்த கட்சிக்கு தனிப்பட்ட அளவில் அதிக இடங்கள் உள்ளதோ அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கலாம். அதாவது மெஜாரிட்டி இல்லாமல் கூட ஆட்சி அமைத்து மெஜாரிட்டியை இத்தனை நாட்களுக்குள் நிரூபிக்க சொல்லலாம். அதாவது பாஜகவை அழைக்க வாய்ப்புகள் அதிகம்.
2. சில சமயம் அரசியல் அதிசயமாக.. தனிப்பட்ட அளவில் அதிக இடங்கள் இருந்தும் பாஜகவிடம் மெஜாரிட்டி இல்லை என்று அவர்களை குடியரசுத் தலைவர் அழைக்கவில்லை என்றால்.. எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி அல்லது கட்சிகளிடம் ஆதரவு கேட்டு பேச வேண்டி இருக்கும்.
3. எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி அல்லது கட்சிகளிடம் ஆதரவு கேட்டு வாங்கும் பட்சத்தில் எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரலாம்.
4. எந்த கட்சிக்கு தனிப்பட்ட அளவில் அதிக இடங்கள் உள்ளதோ அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கலாம். அதாவது மெஜாரிட்டி இல்லாமல் கூட ஆட்சி அமைத்து மெஜாரிட்டியை இத்தனை நாட்களுக்குள் நிரூபிக்க சொல்லலாம். ஒருவேளை அப்படி அமையும் ஆட்சி மெஜாரிட்டியை நிரூபிக்க முடியவில்லை என்றால் கவிழும் வாய்ப்புகள் உள்ளன.
5. தொங்கு நாடாளுமன்றம் உருவானால் தானாக ரிசார்ட் அரசியல் வரும். பாஜக எதிர்க்கட்சி எம்பிகளை மொத்தமாக இழுக்க பார்க்கும்.
6, பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பெரும்பாலும் என்டிஏ கூட்டணியே அவர்களை கைவிடும் வாய்ப்புகள் உள்ளன. பாஜக ஆட்சி போதும் என்று கூறி என்டிஏ உடையும் வாய்ப்புகள் உள்ளன.
7, பாஜக அமைச்சரவை தருகிறோம் அல்லது வேறு உத்தரவாதம், மிரட்டல்களை சொல்லி இந்தியா கூட்டணியை உடைத்து ஆட்சி அமைக்கலாம்.
8. பிஜு ஜனதா தளம், தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகியவை வெளியில் இருந்து தரும் சப்போர்ட்டில் என்டிஏ அல்லது இந்தியா கூட்டணி ஆட்சி செய்யலாம்.
-
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
அண்ணாமலை என்றால் சும்மாவா.. பாஜக ஆஃபர் தந்தும் ஏற்கலயாமே? உடையும் ஓட்டு? இன்று 12 மணிக்கு என்னாகுமோ -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்?












Click it and Unblock the Notifications