மானியத்தில் முதலமைச்சரின் சோலார் பம்பு செட்.. விவசாயிகளுக்கு 80 சதவீத மானியம் தரும் சூப்பர் திட்டம்
சென்னை: சோலார் பேனல்கள் மூலம் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் நடைமுறை பல துறைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், விவசாய துறையிலும் சோலார் நடைமுறையை கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே தமிழக அரசு முதலமைச்சர் சோலார் பம்புசெட்டு மானிய திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.. இந்த திட்டம் குறித்து, சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.. இது தொடர்பான அறிக்கையையும் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கிறார்.
தமிழகத்தில் விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வந்தாலும், சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கக் கூடிய சோலார் நடைமுறையும் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது. இதற்கு காரணம், சுற்றுச்சூழலையும் பாதிக்காத வகையில் இந்த திட்டம் உள்ளதுதான்.

முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டம்
அதனால்தான், சோலார் நடைமுறையை விவசாயத்திலும் பயன்படுத்த தமிழக அரசு முடிவெடுத்தது.. இதற்காகவே, 3 வருடங்களுக்கு முன்பு முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டம் (Chief Minister's Solar Power Pump Set Subsidy Scheme) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தியும் வருகிறது.
கிணற்றுப் பாசனத்திற்கு மின்சாரத் தேவை அதிகரித்து வரும் நிலையில், சூரிய சக்தியை சோலார் பேனல்கள் மூலம் மின்சாரமாக தயாரித்து, அதை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாக உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் சோலார் பம்புசெட்டுகள் அமைத்து தரப்படுகின்றன. இதனால் பகல் நேரத்தில் சுமார் 6 முதல் 8 மணி நேரம் வரை தடையற்ற மின்சாரத்தை பெற்று, கிணற்றுப் பாசனத்தையும் விவசாயிகளால் எளிதாக மேற்கொள்ள முடியும்.
ஆவணங்கள் என்னென்ன தேவை
இந்த திட்டத்தின் பலனை பெற வேண்டுமானால், ஏற்கனவே கிணறு அமைத்து மின் இணைப்பு இல்லாமல் டீசல் எஞ்சின் மூலம் பாசனம் மேற்கொள்ளும் விவசாயிகளாக இருக்க வேண்டும்... ஒருவேளை புதிதாக கிணறு அமைத்து இருந்தால், அது அரசு வரையறுத்துள்ள நிலநீர் பாதுகாப்பான குறுவட்டங்களில் இருந்தால் மட்டுமே பயன்பெற முடியும்.
எனவே, ஆதார் கார்டு, சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், சொந்த நிலத்திற்கான சிட்டா மற்றும் அடங்கல் ஆதி திராவிட, பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவராக இருந்தால் சாதிச் சான்றிதழ் போன்ற ஆவணங்களை வைத்திருக்கும் விவசாயிகள் https://pmkusum.tn.gov.in, https://mis.aed.tn.gov.in, https://aed.tn.gov.in என்ற வெப்சைட்டிலோ அல்லது உழவன் செயலி மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
சிறு குறு விவசாயிகளுக்கு 80% மானியம்
இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டிருக்கிறார்.. அதில், "விவசாயிகள் நீர்ப் பாசனத்திற்கான மின்சாரத் தேவையினை பெறுவதற்கு, முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்கீழ் மின் கட்டமைப்புடன் சாராத, தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் ஒன்றிய அரசின் வரையறுக்கப்பட்ட விலையில் அரசு மானியத்தில், வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் அமைக்கப்பட்டு வருகிறது.
சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் மூலம் மின் இணைப்பின்றி பகலில் சுமார் 8 மணிநேரம் வரை பாசனத்திற்காக தடையில்லா மின்சாரத்தினை பெற முடியும்.
தகுதிகள் - நிபந்தனைகள்
மின் இணைப்பு இல்லாத, பாசன ஆதாரமுள்ள தனிநபர் விவசாயிகள் மற்றும் மின் இணைப்பு இல்லாத. பாசன வசதிக்கான சமுதாயக் கிணறு அமைத்துள்ள விவசாய குழுக்கள் தகுதியானவர்களாகும். புதியதாக ஏற்படுத்தப்படும் பாசனத்திற்கான கிணறுகள், நிலநீர் பாதுகாப்பான குறுவட்ட பகுதிகளில் இருத்தல் வேண்டும்.
ஏற்கனவே உள்ள பாசன ஆதாரத்தல் டீசல் என்ஜின் பயன்படுத்தி வரும் பட்சத்தில், அதற்கு மாற்றாக இத்திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை அமைத்துக்கொள்ளலாம்.
இத்திட்டத்தின் மூலம் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு, குறு, விவசாயிகளுக்கு 80% மானியத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
70 சதவீதம் மானியம்
மேலும், பொதுப் பிரிவினைத் சார்ந்த சிறு, குறு விவசாயிகள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த இதர விவசாயிகளுக்கு 70% மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 60% மானியத்தில் வழங்கப்படுகிறது.
மேலும், இத்திட்டம் தொடர்பாக முழு விபரங்களை பெற்று பயனடைய வேளாண்மைப் பொறியியல் துறையின் சேலம் மாவட்ட செயற் பொறியாளர் அலுவலகம் அல்லது வருவாய் கோட்ட அளவில் உள்ள சேலம் மேட்டூர், ஆத்தூர் மற்றும் சங்ககிரியில் செயல்படும் உதவி செயற் பொறியாளார் அலுவலகம் அல்லது வட்டார அளவில் உதவி பொறியாளர் அல்லது இளநிலை பொறியாளர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications