புதுக்கோட்டையில் கரும்பு கட்டையை சுமந்து, 12 வருடமாக மகளுக்கு சீர் கொண்டு செல்லும் 82 வயது பாச அப்பா
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தகோட்டை கிராமத்தில் வாழும் செல்லதுரை என்ற 82 வயதான முதியவர் பற்றின செய்திதான் இன்று சோஷியல் மீடியா முழுவதிலும் ஆக்கிரமித்து கொண்டுள்ளார்... தனது மகளின் மகிழ்ச்சிக்காக ஒவ்வொரு பொங்கலிலும் அற்புதமான செயலால் அனைவரையும் கவர்ந்து வருகிறார் இந்த பாசக்கார அப்பா செல்லதுரை.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் அருகே உள்ள கொத்தகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்லதுரை. 79 வயதான இவருக்குச் சுந்தராம்பாள் என்ற மகள் உள்ளார்.

புதுக்கோட்டை செல்லதுரை
கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தராம்பாள் திருமணமாகி மாமியார் வீடு சென்றுவிட்டார்.. ஆனால், அவருக்கு நீண்ட காலம் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது.. பிறகு கடந்த 8 வருடங்களுக்கு முன்புதான் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.
இந்த குழந்தைகள் என்றால் செல்லதுரைக்கு உயிர்.. அதுமட்டுமல்ல, தன்னுடைய மகளின் நலனுக்காக, பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் மறக்காமல், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் சீர் வழங்கும் பணியை தவறாமல் செய்துவருகிறார் செல்லதுரை..
கரும்பு கட்டை - பொங்கல் சீர்
ஆம், கடந்த 12 வருடங்களாக , பொங்கல் பண்டிகையின்போது செல்லதுரை தன்னுடைய சைக்கிளில் பொங்கல் சீர் பொருட்களை ஏற்றிக்கொண்டு, அவைகளை நேரடியாக மகளிடம் கொண்டு சேர்க்கும் வழக்கத்தை மேற்கொண்டு வருகிறார். மஞ்சள், தேங்காய், பழம், சீர்வரிசை பொருட்கள் போன்ற பல்வேறு பொங்கல் சீர் பொருட்களை வம்பன் கடைவீதியிலிருந்து முன்கூட்டியே சுந்தராம்பாளுக்காக வாங்கிவிடுவார்..
பிறகு அவைகளை சுமார் 17 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மகளின் ஊர் நம்பம்பட்டிக்கு மிதிவண்டியில் எடுத்து சென்று வழங்குகிறார். அதுவும் சைக்கிளில் செல்லதுரை செல்லும் காட்சியே அலாதியானது.. 5 கரும்புகளை தலையில் வைத்துக்கொண்டு பயணம் செய்கிறார். அந்த கரும்புகளை கைகளால் பிடிக்காமல், தலையின் மேல் சரியாக சமநிலையுடன் வைத்துக் கொண்டு செல்கிறார்.

17 கி.மீ சைக்கிளில்
82 வயதில் சைக்கிள் ஓட்டுவதே சிரமம்.. இதில் இத்தனை பொருட்களையும் வைத்து கொண்டு, தலையிலும் கரும்பை சுமந்து கொண்டு, 17 கிமீட்டர் சைக்கிளை ஓட்டி செல்வது காண்போரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது... இதில் செல்லதுரையின் உறுதி, பாசம் வெளிப்படுவதை காண முடிகிறது..
வடக்கு கொத்தக்கோட்டை பகுதியிலிருந்து சுமார் 17 கி.மீ தூரம் 16 வேகத்தடைகளை கடந்து நம்பம்பட்டி வரை சைக்கிளிலேயே சீர் கொண்டு செல்வதுதான் இணையத்தில் அனைவரையும் நெகிழ வைத்து வருகிறது.. மகள் சுந்தராம்பாள் கொடுத்து வைத்தவர் என்றும் நெட்டிசன்கள் பாராட்டி கொண்டிருக்கிறார்கள்,
பாசக்கார அப்பா
"கரும்பு கட்டை தலையில் சுமந்து சீர்வரிசையுடன் ஊர்வலம் வரும் அசராத தாத்தா" என்ற பெயரில் செல்லதுரையின் வீடியோக்கள் டிரெண்டிங் ஆகி கொண்டிருக்கின்றன,..
குழந்தைகளுக்காக பெற்றோர் எவ்வளவு பெரிய அர்ப்பணிப்பையும் செய்ய தயாராக இருக்கிறார்கள், எவ்வளவு பெரிய பாரத்தையும் தலையில் சுமப்பார்கள் என்பதைதான் செல்லதுரையும் நிரூபித்து கொண்டிருக்கிறார்..!!












Click it and Unblock the Notifications