என்ன கோட்டாவுல வந்தோமா? இடஒதுக்கீட்டை கேலி செய்யும் "83" படம்.. கிறிஸ் ஸ்ரீகாந்த் அப்படி பேசினாரா?
சென்னை: தேசிய அளவில் பல மொழிகளில் வெளியாகி ஹிட் அடித்து இருக்கும் படம் 83. இந்திய கிரிக்கெட் அணி 1983 உலகக் கோப்பை தொடரில் கபில் தேவ் தலைமையில் வென்றதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.
நடிகர்கள் ரன்வீர் சிங், ஜீவா உள்ளிட்ட பலரின் நடிப்பில் கபீர் கான் இயக்கத்தில் படம் எடுக்கப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய அணி எப்படி கொஞ்சம் கூட எதிர்பார்க்காமல் உலகக் கோப்பையை வென்றது, வலுவான மேற்கு இந்திய தீவுகள் அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்தியது எப்படி என்ற கதை இந்த படத்தில் இடம்பெற்று உள்ளது.
படத்திற்கு பெரிய அளவில் நல்ல விமர்சனங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.

சர்ச்சை
இந்த நிலையில் படம் பெரிய அளவில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வந்தாலும் இந்த படத்தில் வரும் முக்கியமான வசனம் ஒன்று கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. படத்தில் கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பாத்திரத்தில் தமிழ் நடிகர் ஜீவா நடித்துள்ளார். படத்தில் இவர் வரும் காட்சிகள் எல்லாமே அதகளமாக இருந்ததை குறிப்பிட வேண்டும்.

83 படம்
இந்த நிலையில் காட்சி ஒன்றில் இந்திய அணியை மற்ற அணிகளும், மீடியாவும் மோசமாக மிக குறைவாக மதிப்பிடுவதை பற்றி வீரர்கள் புலம்புவதாக ஒரு காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். செமி பைனல் வரை வந்தும் கூட இந்திய அணியை யாரும் நம்ப வில்லையே என்பது போல வீரர்கள் புலம்புவதாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும்.

83 ஜீவா வசனம்
இந்த நிலையில்தான் அதில் வரும் ஜீவா.. நாம் கஷ்டப்பட்டு வந்து இருக்கிறோம். நாம் என்ன கோட்டாவில் வந்தோமோ.. நாம் ஒன்னும் செமி பைனலுக்கு கோட்டா காரணமாக வந்துவிடவில்லை, என்று பேசுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். அதாவது இடஒதுக்கீடு மூலம் நாங்கள் செமி பைனலுக்கு வரவில்லை என்று கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பாத்திரத்தில் வரும் ஜீவா சொல்வதாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும்.

83 இடஒதுக்கீடு ஜீவா
இந்த வசனம்தான் இணையம் முழுக்க கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. இடஒதுக்கீடு என்றால் அவ்வளவு குறைவாக போய்விட்டதா.. தாழ்த்தப்பட்ட மக்களை மேலே கொண்டு வரும் ஒரே சிஸ்டம் அதுதான். அதற்கு எதிராக ஏன் இப்படி வசனம் வைக்க வேண்டும். உண்மையில் கிறிஸ் ஸ்ரீகாந்த் நிஜத்தில் இப்படி பேசினாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர்.

நிஜத்தில் பேசினாரா?
இன்னும் சிலரோ இந்திய அணியில் கோட்டா இல்லை. மெரிட் சிஸ்டம்தான். அப்படி இருந்தும் 1983ல் கோப்பை வாங்கிய இந்தியா மீண்டும் 50 ஓவர் உலகக் கோப்பை வாங்க ஏன் 2011 வரை காத்திருக்க வேண்டும். எங்கே சென்றது உங்கள் மெரிட் சிஸ்டம். 100 பேர் உள்ள நாட்டில் திறமையானவர்களை மெரிட் முறையில் கண்டுபிடிக்க முடியவில்லையா? என்றும் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
Recommended Video

உலகக் கோப்பை கிரிக்கெட்
இன்னும் சிலர் படத்தின் ஹீரோ ரன்வீர், ஜீவா ஆகியோரை டேக் செய்தும் கடுமையான விமர்சனங்களை வைத்து உள்ளனர். இப்படி ஒரு காட்சி வைத்தது தவறு. இடஒதுக்கீடும் என்பது பல வருட போராட்டம். தாழ்த்தப்பட்ட மக்கள் இப்போது கொஞ்சம் மேலே வந்திருக்க ஒரே காரணம் இடஒதுக்கீடுதான்.. பல நூறு ஆண்டுகள் அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டது குறித்து உங்களால் பேச முடியுமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.












Click it and Unblock the Notifications