8வது ஊதியக்குழு ரெடி.. அப்போ அகவிலைப்படி அரியர் எப்போது வரும்? பல லட்சம் ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ்
சென்னை: 8வது ஊதியக்குழு தொடர்பாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜனவரி 1, 2026 முதல் புதிய ஊதியக்குழு அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ அரியர் தொடர்பான முக்கியமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
8வது ஊதியக் குழு எப்போது வரும் என்பது தொடர்பான தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 2016 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்த 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை பின்பற்றி தற்போது சம்பள அமைப்பு, ஓய்வூதிய அமைப்பு நடைமுறையில் உள்ளது. 8வது ஊதியக் குழுவின் உருவாக்கத்துடன் சம்பள அமைப்பு முற்றிலுமாக மாற்றி அமைக்கப்படும்.

8வது ஊதியக்குழு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த நிதி ஆண்டு முடிந்த பின் மார்ச் 2026ல் அறிவிப்பு வெளியாகும். ஏப்ரல் 1 -2026 தேதியில் இருந்து புதிய சம்பளம் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில்தான் விரைவில் 18 மாதங்களுக்கான டிஏ அரியர் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தொகையை மத்திய அரசு ஒதுக்க உள்ளதாக கூறப்பட்டது. பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்புகள் வரவில்லை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழுவிற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை என்பதால் இந்த அரியர் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது .
சீனியர் ஊழியர்களுக்கு சுமார் 1.90 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை கோடி குடும்பங்களுக்கு இதனால் நேரடி பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அடுத்த காலாண்டிற்கான மத்திய அரசு ஊழியர்களுக்கான அடுத்த அகவிலைப்படி உயர்வு 3 சதவிகிதம் இருக்கலாம் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. . சீனியர் ஊழியர்களுக்கு சுமார் 1.90 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை கோடி குடும்பங்களுக்கு இதனால் நேரடி பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இன்னும் 10 நாட்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். ஏற்கனவே 50 சதவிகிதமாக உள்ள டிஏ 54 ஆக உயர்ந்துள்ளது.
இது போக இன்னொரு பக்கம் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர்.
தற்போது உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும் மற்றும் அரசாங்கம் 14% பங்களிக்க வேண்டும். இறுதியில் அந்த முதலீட்டு கார்பஸின் சந்தை வருவாயைப் பொறுத்தது கடைசி கட்ட பென்சன் தீர்மானிக்கப்படும்.
அதுவே பழைய ஓய்வூதிய முறையானது ஒரு பணியாளரின் கடைசி ஊதியத்தில் 50% என்னவோ.. அந்த அளவிற்கு நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளித்தது. இப்போது புதிய முறையால் கடைசி ஊதியத்தில் 38% என்னவோ.. அந்த அளவிற்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது. இந்த நிலையில்தான் புதிய பென்சன்
திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர்.
இது போக மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வோடு சேர்த்து எச்ஆர்ஏ உயர்வும் இருக்கும் என்று அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி தற்போது எக்ஸ், ஒய், இசட் என்று மூன்று பிரிவுகளில் எச்ஆர்ஏ சம்பளம் தரப்படுகிறது.
இவை முறையே 27 சதவிகிதம், 18 சதவிகிதம், 9 சதவிகிதம் ஆகும். இந்த நிலையில்தான் இதில் எல்லா பிரிவிற்கும் தலா 3 சதவிகிதம் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக அகவிலைப்படி 50 சதவிகித்தை தாண்டினால் எச்.ஆர்.ஏ உயர்த்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications