8வது சம்பள கமிஷன் - லைப் டைம் செட்டில்மென்ட்: சம்பள உயர்வில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
சென்னை: மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி (DA) உயர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், தற்போது 8வது சம்பளக் கமிஷன் (8th Pay Commission) மீது திரும்பியுள்ளது. குறிப்பாக மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும் என்ற கேள்விகளுக்கு விடை தேடும் மக்கள் ஏராளாம். இவர்களுக்கான பதில் கிட்டத்தட்ட கிடைத்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
8வது சம்பளக் கமிஷன் மூலம் வரும் புதிய சம்பள உயர்வு, மத்திய அரசு ஊழியர்களின் வருமான அமைப்பை முற்றிலும் மாற்றக்கூடியதாக இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஃபிட்மென்ட் ஃபேக்டர்
ஒவ்வொரு சம்பளக் கமிஷனிலும் Fitment Factor என்பது தான் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருந்து வருகிறது. இது ஒரு மடங்குக் காரணி (multiplier) ஆகும். அதாவது அரசு ஊழியர்கள் தற்போதைய அடிப்படை சம்பளத்தை இந்த பிட்மென்ட் பேக்டர் மூலம் பெருக்கி புதிய அடிப்படை சம்பளத்தை அறிவிக்கும்.
8வது சம்பளக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபேக்டர் சுமார் 2.57 ஆக நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது நிர்ணயம் செய்யப்பட்டால், அடிப்படை சம்பளத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்படும்.
சம்பளம் எவ்வளவு உயர்வு?
ஒரு ஊழியரின் தற்போதைய அடிப்படை சம்பளம் ரூ.18,000 என எடுத்துக்கொண்டால், 2.57 ஃபிட்மென்ட் ஃபேக்டர் கொண்டு கணக்கிடப்படும் போது மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் சுமார் ரூ.46,260 ஆக உயரும். இதன் மூலம் மொத்தமாக 30% முதல் 34% வரை சம்பள உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடிப்படை சம்பளம் அதிகரிக்கும் போது, அதனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் அகவிலைப்படி (DA) மற்றும் வீட்டு வாடகை தொகை (HRA) போன்றவற்றிலும் கூடுதல் பலன் கிடைக்கும். இதனால் மொத்த வருமானம் கூடுதலாக அதிகரிக்கும்.
இந்த புதிய சம்பள மாற்றம் மத்திய அரசு பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்றவர்களுக்கும் பலன் தரும் என்பதால் ஒட்டுமொத்த மத்திய அரசு ஊழியர்களின் கவனம் பிட்மென்ட் பேக்டர் மீது உள்ளது.
எப்போது அமலாக்கம் செய்யப்படும்?
8வது சம்பளக் கமிஷனின் புது சம்பளம் ஜனவரி 1, 2026 முதல் மத்திய அரசு நடைமுறைப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது புதிய சம்பளம் கொடுக்கப்பட வேண்டிய காலம் இது என்றாலும், மத்திய அரசின் முடிவு தான் எப்போது கொடுக்கப்பட வேண்டும் என்பது.
2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8வது சம்பள கமிஷன் நடைமுறைப்படுத்துவதற்கான குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த குழுவிற்கு 18 மாதங்கள் ஆய்வு செய்து பரிந்துரைகளை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
இதன் அடிப்படையில், 2027 மே மாதத்திற்குள் பரிந்துரைகள் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், அரசு அவற்றை ஆய்வு செய்து அமல்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
8வது சம்பளக் குழு அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளமும், மொத்த வருமானமும் குறிப்பிடத்தக்க அளவில் உயர வாய்ப்பு உள்ளது. இது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு, பொருளாதாரத்தில் நுகர்வு செலவையும் அதிகரிக்கக்கூடும் என்பதால், இந்த மாற்றம் மிகுந்த கவனத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications