ஜாக்பாட்.. ஒரே நாளில் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு.. ஸ்டாலின் போட்ட கையெழுத்து.. சிக்ஸர்!
சென்னை: தமிழக அரசுத் துறைகளில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் 9,801 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாட்டில் கடந்த வாரம் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளில் நடந்த பிரச்சனைகள் மிகப்பெரிய அளவில் வெடிக்கும் வாய்ப்புகள் உள்ளன. தமிழகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள், யாரும் எதிர்பார்க்காத வகையில் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டன. ஒரு முக்கிய தேர்வாக அமைய வேண்டிய இந்தத் தேர்வு, நிர்வாகக் குளறுபடிகளாலும், தொழில்நுட்பக் கோளாறுகளாலும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு குளறுபடி புகார்கள் மற்றும் நிர்வாகக் குளறுபடிகளைத் தொடர்ந்து, அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மீது எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும், இளைஞர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் விதமாகவும் இன்று முக்கிய பணி நியமன ஆணைகள் வெளியிடப்பட்டு உள்ளது.
முக்கிய சிறப்பம்சங்கள்:
தேர்வு வாரியங்கள்: TNPSC (டி.என்.பி.எஸ்.சி), மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டன.
நிர்வாக சீர்திருத்தம்: தேர்வு குளறுபடிகள் காரணமாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அதிரடியாக மாற்றப்பட்ட நிலையில், தற்போது வெளிப்படையான முறையில் பணி நியமனங்கள் நடைபெறுவதை அரசு உறுதி செய்துள்ளது.
பயிற்சி மையம்: சென்னை ஷெனாய் நகரில் ₹62.50 கோடி மதிப்பீட்டில், 500 மாணவர்கள் தங்கிப் பயிலும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய "அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையத்திற்கு" முதல்வர் அடிக்கல் நாட்டினார். மொத்தமாக இன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் 9,801 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தொழில்நுட்ப புரட்சி: "தேர்வுக்களம்" செயலி அறிமுகம்
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் "தேர்வுக்களம்" (Thervukkalam) என்ற புதிய மொபைல் செயலியை முதல்வர் அறிமுகப்படுத்தினார்.
இதன் மூலம் தேர்வுக்கு விண்ணப்பிப்பது, ஹால் டிக்கெட் பதிவிறக்கம், பாடத்திட்டங்கள் மற்றும் முந்தைய ஆண்டு வினாத்தாள்களை எளிதாகப் பெற முடியும்.
ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களையும் ஒரே இடத்தில் அறியும் வசதி இதில் செய்யப்பட்டுள்ளது.
50 புதிய மின்-சேவைகள்
மக்களுக்கான சேவைகளை விரைவுபடுத்தும் நோக்கில், ஏற்கனவே உள்ள 10 சேவைகளுடன் கூடுதலாக 50 புதிய மின்-சேவைகளை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். மேலும், அரசு ஊழியர்களின் திறனை மேம்படுத்த AI (செயற்கை நுண்ணறிவு) மற்றும் தரவு பகுப்பாய்வு குறித்த இலவச ஆன்லைன் பயிற்சி இணையதளமும் தொடங்கப்பட்டது.
வெல்வோம் ஒன்றாக
இன்றைய நிகழ்ச்சியில், "திராவிட மாடல்" அரசின் நோக்கம் தகுதியுள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் வேலைவாய்ப்பை உறுதி செய்வதே என்று குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தை வேலைவாய்ப்பு வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக மாற்ற அரசு தொடர்ந்து பாடுபடும் என்றார்.
இந்த விழாவில் துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். பணி ஆணை பெற்ற இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் விழாவிலிருந்து திரும்பினர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications