இந்த 9 மாவட்டங்களில் நீங்க எந்த மாவட்டம்?.. உங்களுக்குதான் தடுப்பூசியில் முன்னுரிமை.. ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது.

கொரோனா பரவல் கட்டுக்குள் வராத நிலையில் தேர்தலின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நேற்று ஆலோசனை மேற்கொண்டனர்.

மாநில தேர்தல் ஆணைய அலுவலகம்

மாநில தேர்தல் ஆணைய அலுவலகம்

சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்த்துத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவல்லி, முதன்மை தேர்தல் அதிகாரி அருண்மணி, முதன்மை தேர்தல் அதிகாரி தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தேர்தல் பணியாளர்கள்

தேர்தல் பணியாளர்கள்

வாக்காளர்கள், தேர்தல் பணியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களான முகக் கவசம், கிருமி நாசினி, பேஸ் ஷீல்டு, கையுறை உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்து வழங்குவது குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் மாவட்ட வாரியாக உள்ள கொரோனா பாதிப்பு நிலவரங்கள் குறித்து டாக்டர் ராதாகிருஷ்ணன் தேர்தல் ஆணையருக்கு எடுத்துக் கூறினார்.

மாவட்டத் தேர்தல் அதிகாரிகள்

மாவட்டத் தேர்தல் அதிகாரிகள்

எனவே அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், ஆட்சியர்கள் மற்றும் தொடர்புடைய சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படவுள்ளது. தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் என டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்தார்.

ஒத்துழைப்பு

ஒத்துழைப்பு

அதற்கு அவர் கொரோனா தொற்று தொடர்பாக தேவையான அனைத்து உரிய தடுப்பு நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என உறுதியளித்தார். தற்போது கொரோனாவின் 3-ஆவது அலை பரவி வருகிறது. கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு கடைகள் திறப்பு, மக்கள் கூடுவதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது போதாகுறைக்கு நிபா வைரஸ் வேறு அச்சுறுத்தி வருகிறது. எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு தடுப்பூசிகளை அனைவரும் போட்டுக் கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. கேரளாவில் ஓணம் உள்ளிட்ட பண்டிகைகளின் போது கூடுதல் தளர்வுகளால்தான் கொரோனா அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+