சாத்தான்குளம் சம்பவம்.. வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்கப்பட்ட அருண் பாலகிருஷ்ணனுக்கு புதுப் பதவி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 9 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அருண் பாலகோபாலனுக்கு பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.எஸ் அதிகாரி அருண் பாலகோபாலன், சென்னை சைபர் கிரைம் பிரிவு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் இன்று வெளியிட்ட உத்தரவில் கூறியுள்ளதாவது:

9 IPS officers in Tamil Nadu have been transferred including Arun Balagopalan

காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அருண் பாலகோபாலன் ஐபிஎஸ் சென்னை சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர்-2 ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை சைபர் குற்றப் பிரிவு எஸ்பி-2 ஆக இருந்த ஓம்பிரகாஷ் மீனா ஐபிஎஸ், சென்னை காவல்துறை நிர்வாக ஏ.ஐ.ஜி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 3. சென்னை காவல்துறை நிர்வாக ஏ.ஐ.ஜி.யாக இருந்த சிபி சக்ரவர்த்தி ஐபிஎஸ், சென்னை, சிபிசிஐடி சைபர் செல் காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை, சிபிசிஐடி - சைபர் செல் காவல்துறை கண்காணிப்பாளர் ஏ. ஜெயலட்சுமி ஐபிஎஸ், தமிழ்நாடு காவல் அகாடமியின் காவல்துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு காவல் அகாடமியின் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ஜெயச்சந்திரன், தமிழ்நாடு கமாண்டோ படைப்பிரிவு காவல்துறை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு கமாண்டோ படைப்பிரிவு காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ஷியாமலா தேவி, சென்னை நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த கண்ணம்மாள், சென்னை மாநகர - மத்திய குற்றப்பிரிவு துறை துணை ஆணையர் - 2ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகர, மத்திய குற்றப்பிரிவு துறை துணை ஆணையர்- 2 ஆக இருந்த தீபா சத்யன், அம்பத்தூர் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

அம்பத்தூர் துணை ஆணையராக இருந்த நிஷா, சென்னை சைபர் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் - 2ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில், வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து அப்போதைய தூத்துக்குடி எஸ்பி அருண் கோபாலன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+