ஓரின சேர்க்கைக்கு மறுப்பு.. 9 வயது சிறுவனை கல்லாலேயே அடித்த இளைஞன்.. மதுரவாயலில் பரபரப்பு
9 வயது சிறுவனை தாக்கியதால் பெற்றோர் மறியலில் ஈடுபட்டனர்
சென்னை: மதுரவாயலில் ஓரினச்சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவனை தாக்கிய விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளை பிடிக்க கோரி பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் அந்த மாற்றுத்திறனாளி.. ஆலப்பாக்கத்தில் உள்ள தியேட்டர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் சுண்டல் விற்று வருகிறார். இவரது மகனுக்கு 9 வயதாகிறது..
ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்துள்ளான்.. இவனை திடீரென காணவில்லை என்று அவரது பெற்றோர் மதுரவாயல் போலீசில் புகார் அளித்தனர்..

படுகாயம்
2 நாளைக்கு முன்பு பள்ளி சென்ற சிறுவன் வீடு வந்து சேரவில்லை.. எங்கெங்கோ தேடி இறுதியில்தான் போலீசிடம் சென்றனர்.. இந்த புகாரின் பேரில் மதுரவாயல் போலீசாரும் விசாரணை செய்து வந்தனர்.. இந்நிலையில், ஏரிக்கரை அருகே உள்ள தனியார் பள்ளிக்கு எதிரே உள்ள மேம்பாலத்தின் கீழ் சிறுவன் ஒருவன் பலத்த படுகாயங்களுடன் மயங்கி கிடப்பதாக போலீசுக்கு தகவல் விரைந்து சென்றனர்..

சிசிடிவி கேமரா
அப்போதுதான் காணாமல் போன சிறுவன்தான் அது என்பது தெரியவந்தது. இதனையடுத்து முதலுதவிக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும், பிறகு மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கும் சிறுவனை அனுப்பி வைத்துவிட்டு, விசாரணையை மேற்கொண்டனர்.. அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்..

இளைஞன்
அப்போது, பாதிக்கப்பட்ட சிறுவன் 18 வயதான இளைஞருடன் சென்றது பதிவாகியிருந்தது. அந்த இளைஞர் கஞ்சா பழக்கம் உடையவராம்.. 11ம் வகுப்பு முடித்துவிட்டு மதுபோதையில் ஊர் சுற்றி வந்துள்ளார்.. இதையடுத்து அவரை தேடி பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபடுத்தினர்.. அப்போதுதான் எல்லா உண்மையும் போலீசாரிடம் வாக்குமூலமாக தெரிவித்தார்.

ஓரினச்சேர்க்கை
சம்பவத்தன்று சுண்டல் விற்று கொண்டிருந்த சிறுவனிடம் போதையில் இருந்த அந்த இளைஞன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட முயற்சித்திருக்கிறார்... அப்போது சிறுவன் மறுத்து தப்பிக்க முயன்றதால் அந்த இளைஞன் கற்களை கொண்டு சிறுவன் மீது கடுமையாக தாக்கியிருக்கிறார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இளைஞனை கைது செய்தனர் போலீசார்... ஆனால், இந்த வழக்கில் மேலும் சிலர் சம்பந்தப்பட்ட இருப்பதாக கூறப்படுகிறது..

நடவடிக்கை
ஆனால், அவர்களை போலீசார் பிடிக்க மறுத்து வருவதாகவும், அவர்களை பற்றிய தகவல்களை தெரிவித்தும் போலீசார் நடவடிக்கையில் இறங்காததற்கு என்ன காரணம் என்றும் பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர்.. அத்துடன் மதுரவாயல் போலீஸ் நிலையம் அருகே சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.. இதையடுத்து அங்கு வந்த போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது


Click it and Unblock the Notifications
