நோன்பு கஞ்சியுடன் பல் செட்டை விழுங்கிய மூதாட்டி! உணவு குழாயில் சிக்கியதை லாவகமாக எடுத்த அரசு டாக்டர்
சென்னை: சென்னையில் ரம்ஜான் கஞ்சி குடித்த போது 93 வயது மூதாட்டி அணிந்திருந்த பல் செட்டை அவர் விழுங்கியதால் அது அவருடைய உணவுக் குழாய்க்குள் சென்றது. இதையடுத்து மூச்சுத்திணறலுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது.
மூதாட்டி தற்போது நலமாக இருக்கிறார். அவருடைய உணவுக் குழாய் இருந்த பல் செட்டும் மருத்துவர்களால் அகற்றப்பட்டுவிட்டது.

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் 93 வயதான ரஷியா பேகம். இவர் புதன்கிழமை அன்று மாலை ரமலான் நோன்பை முடித்துக் கொண்டு நோன்பு கஞ்சியை குடித்துள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த பல் செட்டும் நோன்பு கஞ்சியோடு சேர்த்து விழுங்கிவிட்டார்.
உடனே அந்த பல்செட் உணவுக் குழாயில் சிக்கிக் கொண்டது. கொக்கி போல் அந்த பல் செட் இருந்ததால் உணவுக் குழாயில் சிக்கியதும் மூதாட்டி வலியால் துடித்து விட்டார். உடனே அவரை அவரது மகள் ஷாகீர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆயினும் அங்கு மூச்சுத்திணறலுடனும் எச்சிலை கூட விழுங்க முடியாமலும் மூதாட்டி தவித்துள்ளார்.
இதையடுத்து அவரை அங்கிருந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். ஏற்கெனவே அவரது ரத்த அணுக்கள் குறைந்து ரத்த கொதிப்பு போன் இணை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை அரசு மருத்துவர்கள் உள்நோயாளியாக அனுமதித்தனர்.
மூதாட்டி பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை செய்த நிலையில் மூதாட்டியின் உணவு குழாயில் சிக்கிக் கொண்டிருந்த பல் செட்டை உள் நோக்கு கருவி மூலம் எடுத்தனர். சுமார் 4 மணி நேரம் போராடி அந்த பல் செட்டை எடுத்த பிறகு அந்த மூதாட்டி தற்போது குணமடைந்து வருகிறார்.
இதையடுத்து மூதாட்டியின் மகன் அரசு மருத்துவர்களுக்கு நன்றி கூறினார். மூதாட்டிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் அவருடைய மகன் தெரிவித்தார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications