செங்கல்பட்டில் ஷாக்.. 6ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. 17 வயது சிறுவன் கைது
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே 6ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
செங்கல்பட்டு மாவட்டம் வெங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற சிறுமி(பெயர் விவரங்கள் மாற்றப்பட்டுள்ளது). அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சிறுமி வீட்டில் இருந்து வந்துள்ளார்.
லட்சுமியின் தந்தை அந்த பகுதியில் கோழிக்கறி கடை நடத்தி வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று மின்சார கட்டணம் செலுத்துவதற்காக மகளை உடன் அழைத்துச் சென்றுள்ளார் லட்சுமியின் தாய். பின்னர் இறைச்சி கடைக்கு வியாபாரத்துக்கு செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்த சென்றுள்ளார். லட்சுமி வீட்டுக்கு தனியாக வந்திருக்கிறார்.

போலீசில் புகார்
ஆனால் சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்து பார்த்த அந்த தம்பதி தங்கள் மகள் வீட்டை வந்து சேரவில்லை. இதை அறிந்து அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். இதையடுத்து சதுரங்கப்பட்டினம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர்.

முட்புதரி மாணவி
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சிறுமி வீட்டின் அருகிலிருந்த முட்புதரில் மர்மமான முறையில் காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் பெற்றோர் போலீசிடம் தெரிவித்தனர்.

பாலியல் கொடுமை
இதையடுத்து சிறுமியின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் செங்கல்பட்டு அருகே 11 வயது சிறுமி திட்சிதா கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

கொலை செய்தான்
மின்சார கட்டணம் செலுத்த அம்மாவுடன் சென்ற சிறுமி, தனியாக வந்து கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்துள்ளான். வன்கொடுமை செய்ய முயற்சித்த போது சிறுமி கத்தியதால் , சிறுவன் கல்லால் தாக்கி சிறுமியை கொன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications