பாஜகவிற்கு முழுக்கு.. அதிமுகவிற்கு தாவும் "தாமரை".. பெண் புள்ளி கட்சி மாறுராராமே? நோ சொன்ன எடப்பாடி?
சென்னை: பாஜகவை சேர்ந்த பெண் அரசியல் தலைவர் ஒருவர் கட்சி மாற உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அவர் அதிமுகவிற்கு சேர முயன்று வருவதாக தகவல்கள் வருகின்றன.
சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி சார்பாக அதிமுக மாநாடு மதுரையில் நடத்தப்பட்டது. அதிமுகவில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டும், தென் மண்டலத்தில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டும், திமுகவிடம் தான் எதிர்க்கட்சிதான் என்பதை நிரூபிக்க வேண்டும்.. பாஜகவிடமும் தன்னுடைய பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற பல்வேறு "நிரூபிக்க வேண்டும்" காரணங்களால் எடப்பாடி பழனிசாமி மதுரை மாநாட்டை கூட்டினார்.

அதன்படியே கிட்டத்தட்ட ஒன்றை லட்சம் பேர் இந்த நிகழ்வில் கூடினார்கள். எடப்பாடியின் புகழை அதிமுக நிர்வாகிகள் எல்லோரும் பாடினார்கள். அதேபோல் புரட்சி தமிழர் என்ற பட்டம் கூட எடப்பாடி பழனிசாமிக்கு இந்த கூட்டத்தில் வழங்கப்பட்டது.
மாநாடு எப்படி நடந்தது?: அதிமுகவை கைப்பற்றியதை கொண்டாடும் விதமாக, அதிமுக தன்னுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதை காட்டும் விதமாக எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்தினார்.
இந்த மதுரை மாநாட்டில் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் கலந்து கொண்டனர். 3 லட்சத்திற்கும் மேல் கூட்டம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1 - ஒன்றரை லட்சம் பேர் இதில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அரசியல்: இந்த நிலையில்தான் பாஜகவை சேர்ந்த பெண் அரசியல் தலைவர் ஒருவர் கட்சி மாற உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அவர் அதிமுகவிற்கு சேர முயன்று வருவதாக தகவல்கள் வருகின்றன. அதிமுகவின் எழுச்சியை கண்டு அவர் அதிமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
அந்த பாஜக பெண் நிர்வாகி ஏற்கனவே திமுக உள்ளிட்ட கட்சியில் இருந்தவர். அதன்பின் வேறு ஒரு கட்சியில் அவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில்தான் தற்போது பாஜகவில் அந்த நிர்வாகி இணைந்துள்ளார்.
இந்த நிலையில்தான் பாஜகவில் இருந்து அவர் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வருகின்றன. பாஜகவில் அவர் இருந்தாலும் பெரிய பதவிகள் தரப்படவில்லை. லோக்சபா தேர்தலிலும் அவருக்கு வாய்ப்பு தரப்படாது என்கிறார்கள்.
நாடு முழுக்க லோக்சபா தேர்தலுக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் - திமுக ஆகியவை சேர்ந்து பிரம்மாண்டமாக இந்தியா என்ற கூட்டணியை தேசிய அளவில் உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட 26 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்று உள்ளன.
2024 லோக்சபா தேர்தல் குறித்து பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதில் சில கருத்து கணிப்புகள் பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்காது என்றும் சில கருத்து கணிப்புகள் பாஜகவிற்கு கண்டிப்பாக மிகப்பெரிய மெஜாரிட்டி கிடைக்கும் என்றும் தெரிவிக்கின்றன.
பெண் தாவல்: இந்த நிலையில்தான் பாஜகவிற்கு எதிர்காலம் இல்லை என்று கருதி அவர் கட்சி மாற உள்ளதாக தகவல்கள் வருகின்றன. தமிழ்நாட்டில் அதிமுகவிற்கு எதிர்காலம் இருக்கும் என்பதால் அந்த பெண் அரசியல் தலைவர் கட்சி மாற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு பெரிய தொகையை அந்த அரசியல் தலைவர் எதிர்பார்த்ததாக கூறப்படுகிறது. ஆனால் மதுரை மாநாட்டின் வெற்றி காரணமாக காசு கொடுத்து யாரையும் கட்சியில் சேர்க்கும் நிலைமையில் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications