போச்சு.. மெயின் ஆள் இவங்கதான்.. அதிமுக - பாஜக மோதலில் இறங்கிய "பெண்" அமைச்சர்.. ரெடியான ரிப்போர்ட்
சென்னை: அதிமுக பாஜக மோதல் நடந்து வரும் நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்தவரும்.. மத்திய அமைச்சராக இருப்பவருமான பெண் அமைச்சர் ஒருவர் தமிழ்நாடு கூட்டணி மோதல் பற்றி ரிப்போர்ட் ஒன்றை டெல்லிக்கு அனுப்பி உள்ளாராம்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அதிமுக - பாஜக கூட்டணியை முறிப்போம் என்று அதிமுக அறிவித்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலை மற்றும் சட்டசபை தேர்தலை ஒன்றாக சந்தித்த அதிமுக - பாஜக கூட்டணி ஒரு வழியாக முறிந்துள்ளது.

பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுக தலைவர்களுக்கு எதிராக பேசி வந்ததால், அதிமுகவின் முன்னாள் தலைவர்களை இகழ்ந்து பேசி வந்ததால் இந்த கூட்டணி முறிந்துள்ளது
ஓபிஎஸ் இன்று முடிவு ; இந்த விவகாரத்தில் இன்று ஓ பன்னீர்செல்வம் இன்று முக்கிய முடிவு எடுக்க உள்ளார். அதாவது அதிமுக பாஜக இடையிலான மோதலுக்கு இடையில் ஓ பன்னீர்செல்வம் தன்னுடைய நிலைப்பாட்டை எடுக்க உள்ளாராம் . அதிமுகவில் சிலர் பாஜக - அதிமுக மோதலை விரும்பவில்லை. கூட்டணி முறிந்ததை சில அதிமுக டாப் லீடர்கள் விரும்பவில்லை. எடப்பாடிக்கு நெருக்கமாக இருக்கும் 4 மாஜி அமைச்சர்களே இந்த பிரிவை விரும்பவில்லை. பாஜகவின் கோபத்திற்கு நாம் ஆளாக நேரிடும் .
பாஜகவை எதிர்த்தால் ரெய்டு வரும். பல வழக்கில் சிக்க நேரிடும். நமக்குத்தான் சிக்கலாகும். அதனால் பாஜகவை எதிர்க்க வேண்டாம் என்று சில மாஜி அமைச்சர்கள் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் கருத்தை கேட்காமல் கூட்டணியை முறிக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி முடிந்த அந்த மாஜிக்கள்.. பாஜகவிற்கு அஞ்சி.. எடப்பாடிக்கு எதிராக திரும்ப வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பாஜகவிற்குத்தான் எங்கள் விசுவாசம்.. எடப்பாடிக்கு இல்லை என்பதை காட்ட சில அதிமுக நிர்வாகிகள் திட்டமிடுகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கும் விதமாக இவர்கள் ஓ பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் திட்டத்திலும் இருக்கிறார்களாம். அதன்படி ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இவர்கள் விரைவில் அணி மாறலாம். ஏற்கனவே இதில் சிலர் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்துவிட்டதாக கூறப்படுகிறது. அதனால் இன்று ஓ பன்னீர்செல்வம் இன்று முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இன்னும் முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு அதன்பின் முக்கிய முடிவு ஒன்றை ஓ பன்னீர்செல்வம் அறிவிக்க போகிறார் என்று கூறப்படுகிறது.
அண்ணாமலை டெல்லி; இதற்கு இடையில் அண்ணாமலை டெல்லிக்கு பயணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி அண்ணாமலைதான் கூட்டணி மோதலுக்கு காரணம். அவர்தான் அண்ணாவிற்கு எதிராக தேவரை பற்றி பேசினார். அதற்கு முன் ஜெயலலிதா பற்றி பேசினார். அவர் ஊழல் வழக்கில் கைதானார் என்று பேசினார். அதற்கு முன்பே அதிமுக தலைவர்களை இகழ்ந்து கடுமையாக பேசினார் அண்ணாமலை.

அண்ணாமலையின் இந்த பேச்சுக்கள் அதிமுக தலைவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகிய நிலையில்தான் கூட்டணி முறிவு ஏற்பட்டது. இந்த கூட்டணி முறி காரணமாக டெல்லி கடும் அப்செட்டில் இருக்கிறதாம் . இந்த நிலையில அண்ணாமலை டெல்லிக்கு அழைக்கப்பட்டு உள்ளார் என்று கூறப்படுகிறது. டெல்லியில் உள்ள தலைவர்களை சந்தித்து அவர் கூட்டணி தொடர்பாக பேச உள்ளார் என்றும் கூறப்படுகிறது .
மெயின் ஆள்: இன்னொரு பக்கம் தமிழ்நாட்டை சேர்ந்தவரும்.. மத்திய அமைச்சராக இருப்பவருமான பெண் அமைச்சர் ஒருவர் தமிழ்நாடு கூட்டணி மோதல் பற்றி ரிப்போர்ட் ஒன்றை டெல்லிக்கு அனுப்பி உள்ளாராம். பாஜகவின் செயற்பாடு எப்படி? அதிமுக செயல்பாடு எப்படி? கூட்டணி முறிந்தால் யாருக்கு பிரச்சனை? கூட்டணி முறிவிற்கு யார் காரணம்? இதை சரி செய்ய வேண்டும்? எப்படி சரி செய்ய வேண்டும்? என்பதை லிஸ்ட் போட்டு டெல்லிக்கு அனுப்பி உள்ளாராம்.












Click it and Unblock the Notifications