சர்வீஸுக்கு விட்ட கார் ரோட்டில் சென்றபோது திடீர் தீ.. என்ன நடந்தது?
சென்னை: சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில் காரில் பயணம் செய்த நபர் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் எடிசன். இன்று எடிசன் தனது காரை வடபழனியில் உள்ள நிறுவனத்தில் சர்வீஸ் செய்து விட்டு சின்னமலையில் உள்ள கம்பெனி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
சென்னை சைதாப்பேட்டை, அண்ணாசாலையில் சென்று கொண்டிருந்த போது காரின் முன்புறத்தில் இருந்து திடீரென முன்பக்கத்திலிருந்து புகை வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த எடிசன் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கி ஓடத் தொடங்கினார்.

ஓடும் காரில் தீ
எடிசன் காரிலிருந்து சென்ற சில நிமிடங்களிலேயே காரில் மெதுவாக இருந்து புகை குபுகுபுவென வரத் தொடங்கியது. இதன் காரணமாக சாலை முழுவதும் கரும் புகை சூழ்ந்த நிலையில் திடீரென காரில் தீப்பற்றியது. மளமளவென பற்றிய தீயில் கார் முழுவதும் எரிந்து சேதமானது. அப்போது அருகில் இருந்த ஒரு நபர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து தீயணைப்பான் கொண்டு தீயை அணைக்க முயற்சித்தனர்.

போக்குவரத்து நெரிசல்
ஆனால் தீயின் வேகம் அதிகமாக இருந்ததல் காரணமாக தீயை அணைக்க முடியவில்லை . இதனால் செல்லம்மா கல்லூரி முதல் சின்னமலை ஏஜி சர்ச் வரை அந்த சாலையில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது . தகவலறிந்து அங்கு விரைந்த போக்குவரத்து காவல்துறை போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

கார் முழுவதும் சேதம்
அதன் பின் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் இருந்து 3 தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். ஆனாலும் தீ விபத்து காரணமாக கார் முற்றிலும் எரிந்து எலும்பு கூடாக காட்சி அளித்தது. இருந்தபோதும் உயிர் தப்பிய எடிசன் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு சில மணி நேரங்கள் ஆனது.

போலீசார் விசாரணை
இந்த விபத்து காரணமாக அண்ணா நெடுஞ்சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதையடுத்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு காவல் துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர். தொடர்ந்து தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் அடிக்கடி சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே கார்கள் தீப்பிடித்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடதக்கது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications