திடீர் சத்தம்.. 3 முறை புரண்டு கவிழ்ந்த கார்.. நேப்பியர் பாலம் அருகே அதிகாலை நேரத்தில் அதிர்ச்சி!
சென்னை: சென்னை நேப்பியர் பாலம் அருகே இன்று அதிகாலை கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
மயிலாப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ரமணகரன் ஓட்டி வந்த கார், டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச் சுவரில் மோதி விபத்தில் சிக்கியது.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த பெண்மணியும், அவரது மகனும் திருவண்ணாமலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். ரமணகரன் என்ற கல்லூரி மாணவர் காரை ஓட்டி வந்த நிலையில் சென்னை போர் நினைவுச் சின்னம் அருகே காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்துள்ளது.
இதையடுத்து கார் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டு தடுப்புச்சுவரில் மோதி, 3 முறை புரண்டு தலைகுப்புற கவிழ்ந்தது. அந்த வழியாகச் சென்றவர்கள், காரில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
நல்வாய்ப்பாக, காரில் இருந்த ரமணகரன் மற்றும் அவரது தாயார் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் கார் டயர் வெடித்து கார் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை, இந்தியாவிலேயே சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து தமிழ்நாடு முதல் இடத்தில் இருந்துள்ளது.
தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் அதிகம் பதிவான மாவட்டங்கள் சென்னை மற்றும் கோவை தான். 2023 ஆம் ஆண்டில் சென்னை மற்றும் கோவையில் தலா 3,642 விபத்துகள் பதிவான நிலையில், சென்னையில் 500 பேரும், கோவையில் 1,040 பேரும் விபத்துகளில் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications