Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாம்பரம் மின்சார ரயில் வேளச்சேரி வழிதடத்தில் ஓடுமா? சென்னைக்கு மார்ச்சில் இரண்டு பெரிய குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மக்கள் தற்போது போதிய மின்சார ரயில் போக்குவரத்து இல்லாமல் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த இக்காட்டான சூழலில் மார்ச் பிறந்தால் இரண்டு நல்ல விஷயம் சென்னை மக்களுக்கு நடக்க போகிறது. ஒன்று போரூர், பூந்தமல்லி பக்கம் வசிப்பவர்களுக்கும், இன்னொன்று மயிலாப்பூர் முதல் மடிப்பாக்கம் வரை தென் சென்னை பகுதிகளில் வசிப்பவர்களுக்கு நடக்க போகிறது. அது பற்றி பார்ப்போம்.

சென்னையில் எத்தனை பேருந்துகள் ஓடினாலும் ரயில் போக்குவரத்து வசதிகளை போல் வராது. ஏனெனில் மக்கள் அடர்த்தி என்பது சென்னையில் வெறும் 25 கிலோ மீட்டர் சுற்றளவிலேயே மிக அதிகமாக உள்ளது. சென்னையில் வாகன நெரிசல் அதிகமாக இருப்பதால் மக்கள் என்னதான் தனி வாகனங்களை எடுத்துக் கொண்டு கிளம்பினாலும், சரியான நேரத்திற்கு போய்விட முடியாது. அந்த அளவிற்கு நெரிசல் அதிகமாகவே இருக்கிறது.

A change in the way the railways think will be a boon for the entire Chennai Two good news in March

கற்பனை செய்ய முடியாத மாற்றம்

இன்னும் 20 வருடங்களில் இப்போது உள்ள நிலையைவிட எண்ணி பார்க்கவே முடியாத அளவிற்கு வாகன நெரிசலும், மக்கள் அடர்த்தியும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட போகிறது. அதனை கவனித்து தான் சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பூந்தமல்லி முதல் கலக்கரை விளக்கம் வரை உள்ள வழித்தடத்தில், பூந்தமல்லி முதல் வடபழனி வரை பணிகள் முடிந்துள்ளன. குறிப்பாக பூந்தமல்லி முதல் போரூர் வரை முழுமையாக பணிகள் முடிந்துவிட்டன.

வடபழனி மெட்ரோ

அதேநேரம் போரூர் முதல் வடபழனி வரை பணிகள் முடிந்தாலும், ஆலப்பாக்கம், சாலிகிராமம் ரயில் நிலையத்தில் பணிகள் முடியவில்லை. இதனால் பூந்தமல்லி முதல் வடபழனி வரை மெட்ரோ ரயிலை இயக்கினாலும், ஆலப்பாக்கம், சாலிகிராமம் ரயில் நிலையத்தில் மட்டும் ரயில்கள் நிற்காமல் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் ரயிலை இயக்க அனுமதி கிடைப்பதில் தாமதம் நிலவி வந்தது.

மோடி திறந்து வைக்க வாய்ப்பு

இந்நிலையில் மத்திய ரயில்வே வாரியம் விரைவில் இந்த வழித்தடத்தில் ரயில்கள் ஓட அனுமதிக்கும் என தெரிகிறது. அப்படி அனுமதி அளித்தால், அனேகமாக சென்னை வரும் பிரதமர் மோடி, பூந்தமல்லி வடபழனி வரை வழித்தடத்தை மார்ச் மாதத்தில் திறந்து வைப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில்

அதேபோல் 2009ம் ஆண்டில் தொடங்கி 2026 வரை சுமார் 17 ஆண்டுகளாக மெதுவாக நடந்து வந்த பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் பணிகள் அண்மையில் முடிந்து சோதனை ஓட்டமும் நடந்துவிட்டது. இந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்கப்போவதாக தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின்சார ரயில்களை உரிய முறையில் இயக்க முடியாத நிலையில் ரயில்வே இருக்கிறது. இதனால் கோடிக்கணக்கான பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். சென்னை ரயில்வே கோட்டம் தவறான பிளானிங் தான் இதற்கு காரணம் என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

வழித்தடத்தை மாற்றிவிடலாம்

இந்நிலையில் தான் பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 10ம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. எனினும் தாம்பரம், பரங்கிமலை, வேளச்சேரி இணைப்பு முதல் கடற்கரைக்கு திருப்பிவிட்டு மின்சார ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்தால் சிறப்பாக இருக்கும். அப்படி ரயில்களை இயக்கினால், மெயின் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் முடியும் வரை ஏற்படும் சிக்கலை ஓரளவு சமாளித்துவிட முடியும். எனவே மின்சார ரயில்களை தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி வழியாக கடற்கரைக்கு பல்வேறு ரயில்கள் மாற்றிவிடலாம்.. அப்படி மட்டும் நடந்தால் அது மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+