சென்னை மாதவரத்தில் 3வது மாடியில் விளையாடிய 3 வயது குழந்தை.. சிறிய இடைவெளி.. தாயின் கண்முன்னே ஷாக்
சென்னை: சென்னை அடுத்த மாதவரத்தில் உள்ள ஒரு வீட்டில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்தான். மொட்டை மாடி கைப்பிடி தடுப்பு சுவரில் இருந்த சிறிய இடைவெளி சிறுவனின் உயிரை பறித்துள்ளது.
அடுக்குமாடி வீடுகளில், பிஞ்சு குழந்தைகளுடன் இருக்கும் பெற்றோர் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். குறிப்பாக உயரமான மாடிகளில் உள்ள பெற்றோர் குழந்தை வெளியே குதிக்காத வகையில் தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

குழந்தைகள் தவறி விழ வாய்ப்பு உள்ள பகுதிகளை கண்டறிந்து அதனை சரி செய்ய வேண்டும். அப்படி சரி செய்ய முடியாத ஆபத்தான குடியிருப்புகளில் குடியேறுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் குழந்தைகள் படியில் ஏறும் போதோ, நடக்கும் போதோ கவனக்குறைவாக தவறி விழ வாய்ப்பு உள்ளது. ஏன்பெரியர்களே கவனக்குறைவாக சென்றால், ஆபத்தான படிக்கட்டுகள் அல்லது பாதைகள் பாதிப்பை ஏற்படுத்தும்.
அப்படித்தான் பிஞ்சு குழந்தையின் உயிர் போயிருக்கிறது. இந்த கோர சம்பவம் சென்னை அடுத்த மாதவரத்தில் உள்ள ஒரு வீட்டில் நடந்துள்ளது.
சென்னையை அடுத்த மாதவரம் நேரு தெருவில் உள்ள ஒரு வீட்டில் 3-வது மாடியில் குடும்பத்துடன் 22 வயதாகும் ராகுல் என்பவர் வசித்து வருகிறார். அங்குள்ள ஒரு குடோனில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவருடைய மனைவி பூஜா. இவர்களுக்கு பரூண்(3) மற்றும் சியோன்(2) என 2 மகன்கள். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள், கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இங்கு வந்து வாடகைக்கு குடியேறி இருக்கிறார்கள்.

பூஜா தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று அங்கு துணி துவைத்து கொண்டு இருந்தார். அருகில் 2 குழந்தைகளும் விளையாடி கொண்டிருந்தார்கள். அப்போது சியோன், மொட்டை மாடியில் உள்ள கைப்பிடி தடுப்பு சுவரில் இரும்பு குழாய்களுக்கு இடையே இருந்த சிறிய இடைவெளி வழியாக 3-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டான்.
இதில் சியோன், பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். தனது கண் எதிரேலேயே மகன் மாடியில் இருந்து கீழே விழுந்து பலியானதை கண்டு பூஜா கதறி அழுதார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் பலியான குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள். தாயின் கண் முன்னே மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் மாதவரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications