விஜயுடன் பேசிய டெல்லி "புள்ளி".. யாருங்க அது? காங்கிரஸ் போடும் வேற மாதிரி கணக்கு.. அப்போ திமுக?
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் உடன் காங்கிரஸ் சார்பாக டெல்லியை சேர்ந்த புள்ளி ஒருவர் பேசியதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகளும் கூட்டணி வைப்பது தொடர்பாக இவர்கள் ஆலோசனை செய்ததாக தகவல்கள் வருகின்றன.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, முக்கிய அரசியல் சந்திப்புகளை மேற்கொள்ள உள்ளதாக செய்திகள் வருகின்றன. அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தியைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளார் என்றும் தகவல்கள் வருகின்றன. விரைவில் இந்தச் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயின் அரசியல் திட்டம்
விஜய் அரசியல் களத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தேர்தலுக்கு தயாராகும் நோக்கில், பல்வேறு அரசியல் தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். ராகுல் காந்தியுடனான சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பின் முக்கிய நோக்கம், தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிப்பதாகும். முக்கியமாக திமுக - காங்கிரஸ் கூட்டணியை உடைப்பதற்கான திட்டம் இது என்றும் கூறுகிறார்கள்.
விஜய், தனது அரசியல் கட்சியின் மூலம் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு, தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கூட்டணி அமைப்பது குறித்தும் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதனால், அரசியல் கட்சிகளிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் இந்த மீட்டிங்கிற்கு முதலில் ராகுல் காந்தி ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த மீட்டிங் நடந்தால் அது திமுகவை கடுமையாக அப்செட்டாகும் என்பதால், ராகுல் காந்தி இந்த மீட்டிங்கிற்கு ஒப்புக்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் டெல்லி புள்ளி
இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் உடன் காங்கிரஸ் சார்பாக டெல்லியை சேர்ந்த புள்ளி ஒருவர் பேசியதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகளும் கூட்டணி வைப்பது தொடர்பாக இவர்கள் ஆலோசனை செய்ததாக தகவல்கள் வருகின்றன. அதன்படி விஜய் உடன் டெல்லியை சேர்ந்த அந்த புள்ளி - தமிழ்நாட்டில் தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கான சாத்தியமான சூழல்கள் குறித்து ஆலோசனை செய்தததாக கூறப்படுகிறது.
1. கூட்டணி வைத்தால் விஜய் கண்டிப்பாக அமைச்சரவையில் இடம் தருவார் என்பது ஒரு சாதகம்.
2. விஜய் கண்டிப்பாக 60+ இடங்களை தருவார். ஏனென்றால் விஜயுடன் 234 தொகுதிகளில் போட்டியிட ஆட்கள் இல்லை. இதனால் கூடுதல் இடங்களை விஜய் தருவார். திமுக 40 தருவதே சந்தேகம்.
3. விஜய் வந்தால் அடுத்த சட்டசபை தேர்தலில் கேரளாவில் பிரச்சாரம் செய்ய வைக்கலாம். அங்கே காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க இது உதவும்.
4. கூடுதல் எம்எல்ஏக்கள் வென்றால்.. ராஜ்யசபாவில் காங்கிரஸ் வலிமை கூடும். அதற்கு கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும். அதற்கு விஜய் தேவை.
5. திமுக கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் இல்லாமல்.. தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் தலைகள் சுயமாக முடிவுகளை எடுக்க முடியும்.
காங்கிரஸ் சீனியர்கள் திமுக மீது கோபம்
காங்கிரஸ் கட்சியில் சில சீனியர்கள் மட்டும், 'கட்சி அழிஞ்சிக்கிட்டு இருக்கு. காங்கிரஸ் வளரணும்னா திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியே வரவேண்டும். அது மட்டுமல்ல, கூட்டணி ஆட்சிக்கு தமிழக வெற்றிக்கழகம், அதிமுக தயாராக இருக்கிறது. அந்த கட்சியுடன் நாம் கூட்டணி வைத்தால் ஆட்சியில் காங்கிரஸுக்கு பங்கு கிடைக்கும். 50, 60 ஆண்டுகாலமாக அரசியல் அதிகாரம் காங்கிரஸுக்கு கிடைக்கவே இல்லை.
அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டுமானால் தமிழக வெற்றிக் கழகம் அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைப்பது அவசியம்.. அப்போதுதான் நமக்கு பதவி கிடைக்கும். நமக்கு அமைச்சர் பதவிகள் கிடைத்தால்தான் கட்சி வளரும் என்று, சில சீனியர்கள் மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், மேலிட பொறுப்பாளரோ, கூட்டணி பத்தியெல்லாம் இப்போது பேசுவது தேவையற்ற பேச்சு. திமுகவுடன் கட்சி மேலிடத்துக்கு நல்ல நெருக்கம் இருக்கு. கூட்டணி பத்தியெல்லாம் அவர்கள் முடிவெடுத்துக் கொள்வார்கள்" என்று சீனியர்களிடம் சொல்லியிருக்கிறாராம்.
இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் உடன் காங்கிரஸ் சார்பாக டெல்லியை சேர்ந்த புள்ளி ஒருவர் பேசியதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications