சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்க சார் காந்தி படம்? கடும் சர்ச்சைக்குள்ளான ஹெச். ராஜாவின் தியாகிகள் தின ட்வீட்

Google Oneindia Tamil News

சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச், ராஜா தியாகிகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட ட்விட்டர் பதிவு கடும் சர்ச்சையாகி உள்ளது.

மகாத்மா காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட தினம் இன்று. இது நாடு முழுவதும் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

A controersy erupts over H Rajas Tweet

இந்நாளை முன்னிட்டு தியாகிகள் தினம் என்ற பெயரில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாரதத்தின் சுயாட்சிக்காக பாடுபட்டு உயிர்துறந்த எண்ணற்ற தேச பக்தர்களின் தியாகமும் போராட்டமும் என்றென்றும் நம்மை வழிநடத்தும். தியாகிகள் தினத்தில் அவர்களை வணங்குகிறேன். என குறிப்பிட்டுள்ளார்.

இந்த ட்விட்டர் பக்கத்தில் தியாகிகள் தினம் என்கிற ஒரு படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில் தேசவிடுதலைக்குப் போராடிய தலைவர்கள், மன்னர்கள் படங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் மகாத்மா காந்தியடிகள் படம் மட்டும் இடம்பெறவில்லை என்பதுதான் சர்ச்சையாகி உள்ளது.

@Anwartausif08 என்ற ட்விட்டீஸ்ட், #MahatmaGandhi எங்கே ,அவர் ஒன்னும் தியாகி இல்லையா இப்படி படுகொலை செய்து, அவரை மறைத்து விடுவது என்ன நியாயமா ராஜா அண்ணே என கேள்வி எழுப்பியுள்ளார்.

@SayNoToBJP என்ற நெட்டிசன், காந்தி படம் இல்லாதது குறித்து பலர் வருத்தமும் கோவமும் தெரிவிப்பதை பார்க்க முடிகிறது.. ஆனால், காந்தியை கொன்றவர்கள் ஆட்சியில் நமக்கு இருக்க ஒரே ஆறுதல் இதில் கோட்ஸே படம் இல்லாதது தான். #Gandhi என்கிறார்.

@jarilak எழுதியுள்ள பதிலில், காந்தியின் பெயரால் தியாகிகள் தினம்.அதிலும் காந்தியின் படம் இருட்டடிப்பு.என்ன ஒரு தேச பக்தி அட்மின். #MahatmaGandhi #MartyrsDay என எழுதியுள்ளார்.

@ sathisshzdoc என்கிற ட்வீட்டீஸ்ட், இதுல காந்திய காணோம்... அவர் போட்டோ போட்டா கொன்னவன பத்தி கேப்பானுங்க னு தான.... என எதிர்கேள்வி கேட்டிருக்கிறார்.

@kesavan_murugan என்கிற இப்பதிவர், காந்தி தியாகி இல்லீங்களா அண்ணாச்சி ? அவர் போட்டோவை காணோம். ஒரு வேளை எனக்கு தான் கண்ணு டஸ் ஆகிடுட்சா என சந்தேகம் கிளப்பியிருக்கிறார்.

English summary
A new controversy has erupted over the BJP National Secretary H Raja's Tweet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X