பொறந்த நாளா? பேரு வெச்ச நாளா? டிவிட்டரில் டிரெண்டிங்கான #தமிழ்நாடுநாள்_நவம்பர்1
சென்னை: தமிழ்நாடு நாள் எப்போது கொண்டாடுவது என்பது தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #தமிழ்நாடுநாள்_நவம்பர்1 என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்காகியும் வருகிறது.
1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இதனால் இந்த மாநிலங்கள் நவம்பர் 1-ந் தேதி மாநிலங்கள் உருவான நாளாக கொண்டாடுகின்றன.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதால் தமிழகத்தின் பல பகுதிகள் அண்டை மாநிலங்களுடன் இணைந்தன. எல்லை பகுதிகளை மீட்க தமிழகத் தலைவர்கள் போராடி சில பகுதிகளை மட்டும் மீட்டனர். எஞ்சிய பகுதிகள் அந்தந்த மாநிலங்களிலேயே தற்போதும் இருந்து வருகின்றன

நவ.1 தமிழ்நாடு நாள்
இதனால் நவம்பர் 1-ந் தேதியை பிற மாநிலங்களைப் போல தமிழ்நாடு நாளாக தமிழகம் நீண்ட காலமாக கொண்டாடவில்லை. 1990களின் தொடக்கத்தில் மறைந்த தமிழ் ஆர்வலர் சென்னை அடையாறு மாணவர் நகல நிறுவனரான அருணாச்சலம், தமிழகப் பெருவிழா நவம்பர் 1-ந் தேதி சில காலம் நடத்தினார். அதன் பின்னர் நவம்பர் 1-ந் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது தொடர்பாக விவாதங்கள் தொடர்ந்தன.

அதிமுக அரசு அறிவிப்பு
கடந்த அதிமுக ஆட்சியில் நவம்பர் 1-ந் தேதி தமிழ்நாடு நாள் என அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக வரவேற்றது. தற்போது திமுக ஆட்சியும் தமிழ்நாடு நாள் என நவம்பர் 1-ந் தேதியை கொண்டாட வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதேநேரத்தில் நவம்பர் 1-ந் தேதியை எல்லை பகுதிகளை மீட்க போராடிய எல்லை மீட்பு தியாகிகளை போற்றுகிற நாளாக கடைபிடிப்போம்; சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயரிட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ந் தேதிதான் தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

ஜூலை 18-ல் தமிழ்நாடு நாள்- முதல்வர் ஸ்டாலின்
ஆனால் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர், நவம்பர் 1-ந் தேதியைத்தான் தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஜூலை 18-ந் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாட அரசாணை பிறப்பிக்கப்படும். மேலும் நவம்பர் 1-ந் தேதியன்று எல்லை மீட்பு தியாகிகளுக்கு ரூ1 லட்சம் பொற்கிழி வழங்கப்படும் என அறிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பும் விவாதப் பொருளாகி உள்ளது.

டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு
இது தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் எல்லைப் போராட்டத்தில் பங்கேற்ற ஈகியர்கள் 110 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் பொற்கிழி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருக்கிறார். அது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் 1-ஆம் நாள் எல்லைப் போராட்டத்தை நினைவு கூறும் நாள் தானே தவிர, தமிழ்நாடு நாள் அல்ல; மாறாக 1967-ஆம் ஆண்டு சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நாளான ஜூலை 18-ஆம் நாள் தான் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் கூறியிருப்பதை ஏற்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

தமிழ்நாடு நாள் டிரெண்டிங்
இதனிடையே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #தமிழ்நாடுநாள்_நவம்பர்1 என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்காகி உள்ளது. இதில் தமிழ்நாடு நாள் என்று கொண்டாடப்பட வேண்டும் என்கிற கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு என நவம்பர் 1-ல் மாநிலம் பிறந்த நாளை கொண்டாடுவதா? அல்லது தமிழ்நாடு என ஜூலை 18-ல் பெயர் வைக்கப்பட்ட நாளை கொண்டாடுவதா? என்கிற கேள்விகளும் இந்த ஹேஷ்டேக்கில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. @MaruthuMakkal என்ற பதிவர், நாம்தமிழர் கட்சியின் ஆட்சி தமிழகத்தில் அரியணை ஏறும் போது தமிழ்நாடு நாளை மாபெரும் அரசு பெருவிழாவாக கொண்டாடுவோம்! நீங்கள் வெளியிட்ட அரசாணையை ஒரு கையெழுத்தில் மாற்றுவோம்! என கூறியுள்ளார். @athiyankarthi என்ற நெட்டிசன் 956 ஆம் ஆண்டில் மாநில மறுசீரமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா 14 மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. நவம்பர் 1ஆம் தேதி, கேரள, கர்நாடக, மதராஸ் (சென்னை) மாநிலங்கள் அன்றுதான் பிறந்தன என எழுதியுள்ளார். @vjaliasvijay என்பவர், அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை. வலுவான எதிர்ப்பை எல்லா தமிழ் அமைப்புகளும் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications